Fiverr இணையத்தளம் மூலமாக வீட்டில் இருந்தவாறே பணம் சம்பாதிப்பது எப்படி?
Fiverr எனும் வலைத்தளம் மூலமாக வீட்டில் இருந்தவாறே பணம் சம்பாதிப்பது எப்படி? அதற்கான திறமைகள் வளங்கள் உங்களிடம் உள்ளனவா ? வீடுகளில் இருந்தவாறே பலரும் இந்த வலைத்தளத்தினை பயன்படுத்தி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாதமும் பல இலட்சங்களில் சம்பாதித்து வருகின்றனர் – அது உங்களுக்குத் தெரியுமா ? முதலில் இந்த Fiverr என்றால் என்ன ? இன்று நம்மில் பலர் சந்திக்கின்ற பிரச்சினைகளில் ஒன்று தான் “நிரந்தர அல்லது ஒரு நிலையான வருமானம் பெறுகின்ற தொழில்” என்பதாகும். குறிப்பாக , தொழில்நுட்பங்களைக் கற்ற அதிகமான இளைஞர்கள், தூர இடங்களுக்குச் சென்று தொழில் புரிய விரும்ம்பாத பெண்கள், வீடுகளிலிருந்தே சம்பாதிக்க நினைக்கும் தொழில் தேடுனர்கள், அவர்களுக்குத் தொழில் ஒன்று தேவையாக இருந்தாலும் , தொழில் ஒன்று புரிய விரும்பினாலும் அதனை எவ்வாறு மேற்கொள்வது, எங்கிருந்து அதனைப் பெற்றுக்கொள்வது, யாரினூடகப் பெற்றுகொள்வது எனத் தெரியாமல் வீடுகளிலே முடங்கி இருக்கின்றனர். இங்கே தான் இப்படியான Fiverr போன்ற இணையதளங்கள் இவ்வாறு வீடுகளிலிருந்தே சம்பாதிக்க நினைக்கும் ஊழியர்களுக்கு புதிய பல வாய்ப்புக்களை வழங்குகின்றன. ...