நிதிக் கல்வியறிவு(Financial Literacy): உங்கள் வாழ்வின் வெற்றிக்கான அடிப்படை
💡 நிதி கல்வியறிவு என்றால் என்ன?
நிதி கல்வியறிவு (Financial Literacy) என்பது நாம் பணத்தை எவ்வாறு சம்பாதிக்க வேண்டும், அதனை எவ்வாறு செலவு செய்ய வேண்டும், எப்படி சேமிக்க வேண்டும், எங்கு முதலீடு செய்ய வேண்டும், கடன்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் மற்றும் அவற்றை எவ்வாறு முகாமைத்துவம் செய்ய வேண்டும் போன்ற விடயங்களைத் தெளிவாக அறிந்து, சிறப்பான சரியான நிதிசார் முகாமைத்துவ முடிவுகளை எடுப்பதற்கான அறிவும் திறமையும் ஆகும்.
இது ஒரு தனி நபர் தன்னுடைய வருமானம், செலவுகள், சேமிப்புகள் மற்றும் முதலீடுகளைத் திட்டமிட்டு சிந்திக்க உதவும் ஒரு அடிப்படை விடயமாக இருக்கின்றது
இலங்கையின் தற்போதைய பொருளாதார கடும் சூழ்நிலையை கருத்திற் கொண்டால், நிதி அறிவு என்பது பின்வரும் துறைகளில் மிகவும் முக்கியமான ஒரு விடயமாகக் கொள்ளப்படுகின்றது:
-
பணம் சேமித்தல் (Savings)
-
முதலீடு செய்தல் (Investment)
-
கடன் முகாமைத்துவம் (Loan Management)
-
பணவீக்கம் (விலை நிலை) புரிதல் (Understanding Inflation)
பணத்தை எவ்வாறு சம்பாதிப்பது, எவ்வாறு செலவிடுவது, சேமிப்பது மற்றும் முதலீடு செய்வது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
வரவு-செலவுத் திட்டம் (Budget) உருவாக்குவது மற்றும் அதைப் பின்பற்றுவது எவ்வாறு என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.
கடன்களை நிர்வகிப்பது மற்றும் தேவையற்ற கடன்களில் சிக்குவதைத் தவிர்ப்பது எப்படி என்று புரிந்துகொள்வீர்கள்.
முதலீடுகளின் அபாயங்களையும் வாய்ப்புகளையும் புரிந்துகொண்டு புத்திசாலித்தனமான முதலீட்டு முடிவுகளை எடுப்பீர்கள்.
ஓய்வுக்காலத்திற்கான திட்டமிடல் மற்றும் எதிர்காலத்திற்கான நிதி பாதுகாப்பை உறுதிசெய்வீர்கள்.
மோசடி மற்றும் ஆபத்தான நிதி திட்டங்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வீர்கள்.
இலங்கையின் நிதி சூழலில் அடிப்படையான நிதி அறிவு:
-
இலங்கையின் அன்றாட வாழ்வில் உணவுப் பொருட்கள், எரிபொருள், கல்வி செலவுகள் போன்றவை அதிகரித்துள்ள நிலையில் வருமானத்தையும் செலவையும் கட்டுப்படுத்துதல் மற்றும் முகாமை செய்தல் அவசியமானதாகக் கொள்ளப்படுகின்றது.
-
சிறு வியாபாரிகள், வீட்டுத் தலைமைகள் தங்களது தினசரி வரவு செலவுகளை எழுதி, அதற்கானபதிவேடுகளைப் பேணி வரும் பொது, அவர்களது நிதி நிலையை தெளிவாக புரிந்துகொள்ள முடியுமானவர்களாக இருப்பர்.
-
அதிக வட்டி விகிதம் கொண்ட கடன்களை தவிர்க்கும் திறமை.
-
வங்கிக் கடன்களையும் தனிநபர் கடன்களையும் கட்டுப்படுத்தி பெற்றுக்கொண்ட கடன்களை உரிய நேரங்களில் செலுத்தும் திறனைப் பெற்றுக்கொள்வர்.
-
வங்கிகள், சேமிப்பு நிறுவனங்கள் வழங்கும் உயர்வட்டி சேமிப்பு திட்டங்களில் பணத்தைச் சேமித்து பாதுகாக்குதல்.
-
நிலம், ஆபரணங்கள், வங்கிக் வைப்பு மற்றும் சிறு வணிக முதலீடுகள் குறித்த விழிப்புணர்வு பெறக் கூடியதாக இருக்கும்.
-
சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் தங்களது வியாபார இலாப நஷ்ட விடயங்களை ஒழுங்காக கணக்கிட்டு, தங்களது வியாபார வளர்ச்சியை கண்காணிக்க உதவுகின்றது.
✔️ அத்தியாவசியமற்ற செலவுகளை தவிர்த்து சேமிக்க பழக்கமடையுதல்.
✔️ அவசர நிதி நிதியம் (Emergency Fund) ஒன்றை உருவாக்குதல் மற்றும் சேமித்தல்..
✔️ அவசியமேற்படின் பாதுகாப்பான வங்கிக் கடன்களை மட்டுமே பெறுதல்.
✔️ சுயதொழில், சிறு வணிக முதலீடுகள் குறித்து ஆராய்தல், மற்றும் முதலீடுகளை மேற்கொள்ளல்.
இன்றைய இலங்கையின் பொருளாதாரத்தில் நிதி கல்வியறிவு என்பது ஒரு செல்வாக்கான ஆயுதமாகக் காணப்படுகின்றது. இது நம்மை நிதிசார் பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்பதுடன் ஒருவரின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நிதி கல்வியறிவு சரியான முடிவுகளை எடுக்கவும் வழிகாட்டுகின்றது.
இது தனிநபர்களின் நிதி நல்வாழ்வையும், ஒட்டுமொத்த சமூகத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் மேம்படுத்த உதவுகிறது.
🔗 VocatioVista – உங்கள் நிதி கல்வியறிவு மற்றும் நிதி முகாமைத்துவ பயணத்தின் நம்பகரமான தோழன்!
--------------------------------------------------------------------------------------------------
JOIN WITH US FOR CAREER GUIDANCE SERVICES AND VACANCIES UPDATES
💼 Focus Areas: Career Guidance | Career Counseling | Business Counseling | Business Motivation
📧 Email: vocatiovista@gmail.com
📨 WhatsApp 🌍 Website 📘 Facebook 📸 Instagram 🎥 TikTok ▶️ YouTube
Comments
Post a Comment