Posts

Benjamin Bloom’s Taxonomy Explained: 6 Levels of Learning | Educational Psychology | பெஞ்சமின் ப்ளூமின் (Bloom’s) கற்றல் வகைப்பாட்டியல்

Image
பெஞ்சமின்  ப்ளூமின் (Bloom’s) கற்றல் வகைப்பாட்டியல்  உண்மையில் நாம் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ளும் விடயங்களை வெறுமனே நினைவில் வைப்பதிலிருந்து, அந்த விடயங்களைப் பயன்படுத்தி எவ்வாறு புதிய ஒன்றை உருவாக்கி முன்னேறுகின்றோம் என்பதை விளக்கும் மற்றும் புரிதலை வழங்கும் ஒரு மிக்கியாமன் கல்விக் கட்டமைப்பைத்தான் இந்த ப்ளுமின் கற்றல் வகைப்பாட்டியல் விளக்குகின்றது. 🌱 கல்வியியலாளர் பெஞ்சமின் ப்ளூம் மற்றும் அவரது சக ஆய்வாளர்கள் இணைந்து உருவாக்கிய இந்தக் கட்டமைப்பு , அடிப்படை அறிவிலிருந்து ஆழமான சிந்தனை மற்றும் படைப்பாற்றல் வரை கற்றல் எவ்வாறு வளர்ச்சியடைகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இந்த ஆய்வின் மூலம் அவர்கள் கற்றலை பின்வரும் 6 நிலைகள் ஊடாக விளக்குகின்றனர். 📚 கற்றலின் 6 நிலைகள்: நினைவுகூருதல் ( Remember) – நாம் கருக்கொள்கின்ற தகவல்களையும் விடயங்களையும் நேரத்திற்கேற்ப தேவையான நேரங்களில் இடங்களில் அவற்றை நினைவுகூருவதை இது விளக்குகின்றது.  புரிந்துகொள்ளுதல் ( Understand) – கற்றுக்கொண்ட விடயங்களை ஆழமாக உள்வாங்கி அவற்றின் உண்மைத் தன்மைகள், கருத்துக்கள் மற்றும் சொல்லவரும் விடய...

மாணவர்களின் கல்வித்திறன் விருத்தி: டிஜிட்டல் டிடாக்ஸ் (Digital Detox) மற்றும் நேர முகாமைத்துவம்.

Image
மாணவர்களின் கல்வித்திறன் விருத்தி: மின்னணு (Digital) சாதனங்களின் பயன்பாட்டைக் குறைப்பது அல்லது தவிர்ப்பது (Digital Detox) மற்றும் நேர முகாமைத்துவம் (Time Management). இன்றைய டிஜிட்டல் உலகில் வாழும் மாணவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்னவென்றால், அது கைத்தொலைபேசியும் சமூக ஊடங்களும் என்றால் மிகையாகாது. இந்த இரு விடயங்களும் மாணவர்களின் கல்வி நேரத்தினை கொஞ்சம் கொஞ்சமாக விளுங்கிவருகின்றது என்பதே உண்மை. அனால் சரியான நடமுறைகளைக் மாணவர்கள் நடக்கும் போது, இந்த நிலைமையினை மாற்றியமைக்க முடியும். அதற்கான  ஆய்வுகளின் மூலம் னுநிரூபிக்கப்பட்ட  இரண்டு நடைமுறை வழிமுறைகளை இக்கட்டுரை விளக்குகின்றது - டிஜிட்டல் டிடாக்ஸ் மற்றும் நேர முகாமைத்துவம். 

🎓 சாதாரண தர (O/L) பரீட்சை முடிந்துவிட்டதா? அடுத்து என்ன செய்வது? How to Choose the Right A/L Stream in Sri Lanka After O/L Exams (2026 Guide)

Image
  🎓 சாதாரண தர ( O/L) பரீட்சை முடிந்துவிட்டதா ? அடுத்து என்ன செய்வது ? க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய அநேகமான மாணவர்களுக்கு இருக்கும் பெரிய கேள்விகள் தான், நாம் அடுத்து என்ன செய்வது? என்ன படிப்பது ? உயர்தரத்தில் எந்தத் துறையினைத் தெரிவு செய்வது ? என்ன பாடங்களைத் தெரிவு செய்வது ?  போன்றன. எனவே அப்படி பல கேள்விகளுடனும் குழப்பத்துடனும் இருக்கும் மாணவர்களுக்கான ஒரு சிறிய வழிகாட்டிப் பதிவுதான் இது. க.பொ.த சாதாரண தர ( O/L) பரீட்சைக்குப் பிந்திய காலம் மாணவர்களின் வாழ்வில் மிக முக்கியமான ஒரு தீர்மானத்தை எடுக்கும் காலமாகும். இக்காலப் பகுதியில் அநேகமான மாணவர்கள் குழப்பத்துடன் இருப்பதையும் பொருத்தமில்லாத தீர்மானங்களை எடுப்பதனையும் அவதானித்திருக்கின்றோம். மாணவர்களே! இலங்கையில் நீங்கள் தெரிவு செய்யும் உயர்தர ( A/L) பாடத்துறையானது ( Stream), உங்கள் Z- புள்ளி ( Z-Score) மற்றும் எதிர்கால பல்கலைக்கழகப் பிரவேசத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். மேலும் உங்கள் உயர்தரப் பாடத்துறையையும் பாடங்களையும் தெரிவு செய்வதற்கு முன் பின்வரும் வி...

உயர்தரப் (A/L) பரீட்சைக்குப் பின் என்ன செய்ய வேண்டும்? | 2025/2026 இலங்கை மாணவர்களுக்கான முழுமையான Career Guide | VocatioVista

Image
2025/2026 A/L முடித்த இலங்கை மாணவர்களுக்கான தெளிவான career வழிகாட்டி. A/L முடிவுகள் வருமுன் & பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை அறியுங்கள் – VocatioVista. 🎓 What Should I Do After the A/L Exam? நீங்கள் தற்போது க. பொ. த. உயர்தரப் பரீட்சையை முடித்து விட்டீர்களா? இப்போது உங்கள் மனதில் எழும் மிக முக்கியமான கேள்வி: A/L பரீட்சை முடிந்த பிறகு நான் என்ன செய்யவேண்டும்? என்பதேயாகும்.  நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு மைல்கல்லை தற்போது கடந்துள்ளீர்கள். இலங்கை கல்வி முறையில் இந்த உயர்தரக் கல்வியானது ஒவ்வொரு மாணவரது வாழக்கையிலும் தங்களது எதிர்காலத்தை சிறப்பாக திட்டமிடுவதற்கும் சிறந்த தொழிற்கல்வி முடிவுகளை எடுப்பதற்குமான ஒரு முக்கிய கட்டமாக விளங்குகின்றது. இந்த உயர்தரப் பரீட்சை முடிவடைந்த காலம் என்பது: 📌 உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகும் வரை உள்ள காலம்  📌 எதிர்காலம் பற்றிய குழப்பங்கள் தோன்றும் காலம் 📌 பெற்றோரது மற்றும் சமூகங்களது அழுத்தம் பிரயோகிக்கப்படும் காலம்  போன்றவற்றை கொண்டதாக உள்ளதாகும். இந்த கால கட்டத்தில் வீடுகளில் சும்மா இருக்காமல், இந்த பொன்னான ...

க. பொ. த. உயர்தர கலைப்பிரிவு மாணவர்களுக்கு Data Scientist ஆவது சாத்தியமா? Is it possible for GCE A/L Arts Stream students to become Data Scientist?

Image
க. பொ. த. உயர்தர கலைப்பிரிவில் கற்ற / கற்கும்  மாணவர்களுக்கு Data Scientist ஆவது சாத்தியமா? ஆம், இது முழுமையாக சாத்தியம் எனக் கூறலாம்.  முதலில் Data Science என்றால் என்ன? கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் கலைப்பிரிவில் கற்ற ஒரு மாணவர் எவ்வாறு ஒரு Data  Scientist  ஆக வரமுடியும்? அதற்கான தொழில் முறை வாழ்க்கைப் பாதை என்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.  Data Science என்றால் என்ன? Data Science என்பது ஒரு பரந்த துறையாகும். இது அதிகப்படியான மற்றும் சிக்கலான தரவுகளிலிருந்து (data) எமக்குப் பயனுள்ள தகவல்களை கணினி மற்றும் புள்ளிவிபரவியல் (statistics) மூலம் பகுப்பாய்வு செய்து தங்களுக்கானஎதிர்காலத்தைக் கணிக்கவும், சரியான முடிவுகளை எடுக்கவும் உதவும் ஒரு அறிவியல் முறையாகும்.  எளிமையாகச் சொன்னால், எம்மிடம் உள்ள பழைய தரவுகளைக் கொண்டு, எதிர்காலத்தினைத் திட்டமிடுவதற்கும் முடிவுகள் எடுப்பதற்கும் உதவும் ஒரு துறையாகும்.  இன்று Data Scientist அல்லது Data Analyst களாக தொழில் புரியும் அநேகமானோர், கலைப்பிரிவு (Arts), முகாமைத்துவம் (Management), சமூக விஞ்ஞானம் (So...

🚀 வெற்றிக்கு வழி: தொழில் முயற்சியாண்மை தேர்ச்சிகள் (PEC) என்றால் என்ன?

Image
தொழில் முயற்சியான்மைத் தேர்ச்சிகள் (Personal Entrepreneurship Competencies - PEC) என்றால் என்ன?  ஒரு வியாபாரத்தை அல்லது வணிகச் செயற்பாட்டைத் தொடங்குவதென்பது மிகவும் உற்சாகமான மற்றும் ஆர்வமுள்ள ஒரு விடயமாக இருக்கின்றது. இருந்தபோதிலும் எல்லோராலும் தங்கள் வாழ்க்கையில் இவ்வாறனதொரு அத்தியாயத்தை இலகுவாகத் தொடங்க முடியாது. அவ்வாறே இலகுவாக ஒரு வியாபரத்தைத் தொடங்கி வெற்றிகரமான ஒரு வியாபாரியாகவும் ஆகிவிடவும் முடியாது. அதனால் தான் ஒரு வியாபரத்தை தொடங்குவது மற்றும் ஒரு வெற்றிகரமான வியாபாரியாக மாறுவது என்பது ஒரு சிறந்த மற்றும் நாம் வாழ்க்கையில் எடுக்கின்ற Risk - Taking விடயமாக இருக்கின்றது.  இங்கு ஒரு சிறந்த வியாபாரி அல்லது ஒரு தொழில் முயற்சியாளரானவர் தனது வெற்றிக்கு அத்தியாவசியமான சில தனிப்பட்ட குணங்கள், திறன்கள் மற்றும் மனப்பான்மை என்பன தேவைப்படுகின்றன. இவற்றினையே நாம் "தொழில் முயற்சியாண்மை தேர்ச்சிகள்" (Personal Entrepreneurial Competencies - PEC) என்று அழைக்கின்றோம். இத்தேர்ச்சிகள் என்பது ஒரு தொழில்முயற்சியாளர் தங்கள் இலக்குகளை வெற்றிகரமாக அடைந்து கொள்ளவும் சிறப்பாக தங்கள் வியாபாரத்தி...

FOLLOW ME ON SOCIAL MEDIA