🎓 சாதாரண தர (O/L) பரீட்சை முடிந்துவிட்டதா? அடுத்து என்ன செய்வது? How to Choose the Right A/L Stream in Sri Lanka After O/L Exams (2026 Guide)

 🎓 சாதாரண தர (O/L) பரீட்சை முடிந்துவிட்டதா? அடுத்து என்ன செய்வது?

A/L stream selection guide for Sri Lankan students by VocatioVista.

க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய அநேகமான மாணவர்களுக்கு இருக்கும் பெரிய கேள்விகள் தான், நாம் அடுத்து என்ன செய்வது? என்ன படிப்பது? உயர்தரத்தில் எந்தத் துறையினைத் தெரிவு செய்வது? என்ன பாடங்களைத் தெரிவு செய்வது?  போன்றன. எனவே அப்படி பல கேள்விகளுடனும் குழப்பத்துடனும் இருக்கும் மாணவர்களுக்கான ஒரு சிறிய வழிகாட்டிப் பதிவுதான் இது.

க.பொ.த சாதாரண தர (O/L) பரீட்சைக்குப் பிந்திய காலம் மாணவர்களின் வாழ்வில் மிக முக்கியமான ஒரு தீர்மானத்தை எடுக்கும் காலமாகும். இக்காலப் பகுதியில் அநேகமான மாணவர்கள் குழப்பத்துடன் இருப்பதையும் பொருத்தமில்லாத தீர்மானங்களை எடுப்பதனையும் அவதானித்திருக்கின்றோம்.

மாணவர்களே! இலங்கையில் நீங்கள் தெரிவு செய்யும் உயர்தர (A/L) பாடத்துறையானது (Stream), உங்கள் Z-புள்ளி (Z-Score) மற்றும் எதிர்கால பல்கலைக்கழகப் பிரவேசத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

மேலும் உங்கள் உயர்தரப் பாடத்துறையையும் பாடங்களையும் தெரிவு செய்வதற்கு முன் பின்வரும் விடயங்களையும் கவனத்திற் கொள்ளுங்கள்:

1. இலங்கையிலுள்ள பாடத்துறைகளை (Streams) சரியாகப் புரிந்துகொள்ளுங்கள்:

இலங்கையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) விதிகளுக்கமைய, பிரதானமாக ஐந்து பாடத்துறைகள் உள்ளன. இதில்:

  • பௌதிக விஞ்ஞானம் (Physical Science): இணைந்த கணிதம், பௌதிகவியல், இரசாயனவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தூய கணிதம் போன்ற பாடங்கள் காணப்படுகின்றன. (பொறியியல் (Civil, Mechanical, Electrical, etc.), கணினி விஞ்ஞானம், கட்டடக்கலை (Architecture), அளவையியல் (Quantity Surveying) போன்ற துறைகளுக்குச் செல்ல விரும்பும் மாணவர்களுக்கு இது பொருத்தமாக இருக்கும்).
  • உயிரியல் விஞ்ஞானம் (Biological Science): உயிரியல், பௌதிகவியல், இரசாயனவியல்/விவசாயம் போன்ற பாடங்கள் இதில் காணப்படுகின்றன. (மருத்துவம் (MBBS), பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், உணயிரியல் தொழில்நுட்பம், செவிலியர் (Nursing), மருந்தியல் போன்ற துறைகளுக்குச் செல்ல விரும்பும் மாணவர்களுக்கு இது பொருத்தமாக இருக்கும்).
  • வர்த்தகம் (Commerce): கணக்கீடு, வணிகக் கல்வி, பொருளியல்/தகவல் தொழில்நுட்பம்/கணிதம் போன்ற பல பாடங்கள் காணப்படுகின்றன. (முகாமைத்துவம் (Management), கணக்காய்வு (Accounting), வணிக நிர்வாகம் (BBA), மனிதவள முகாமைத்துவம் போன்ற துறைகளுக்குச் செல்ல விரும்பும் மாணவர்களுக்கு இது பொருத்தமாக இருக்கும்).
  • தொழில்நுட்பம் (Technology): பொறியியல் தொழில்நுட்பம்/உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பம், தொழில்நுட்பத்திற்கான விஞ்ஞானம் மற்றும் பல தெரிவுப் பாடங்களும் காணப்படுகின்றன. (பொறியியல் தொழில்நுட்பம் (BET), உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பம் (BBST), தகவல் தொழில்நுட்பம் (ICT) போன்ற துறைகளுக்குச் செல்ல விரும்பும் மாணவர்களுக்கு இது பொருத்தமாக இருக்கும்).  
  • கலை (Arts): மொழிகள், சமூக விஞ்ஞானம், சமயம் மற்றும் பல தரப்பட்ட பாடங்கள் இதில் காணப்படுகின்றன. (சட்டம் (Law), கலைத்துறை (Liberal Arts), மொழிகள், ஊடகவியல், உளவியல், சர்வதேச உறவுகள் போன்ற துறைகளுக்குச் செல்ல விரும்பும் மாணவர்களுக்கு இது பொருத்தமாக இருக்கும்).  
A/L stream selection guide for Sri Lankan students by VocatioVista.

2.
உங்கள் திறமைக்கும் பாடச் சுமைக்கும் இடையில் சமநிலையைப் பேணுங்கள்

உயர்தரம் என்பது சாதாரண தரத்தை விட அதிக அர்ப்பணிப்பையும் முயற்சிகளையும் கோரும் ஒரு பயணமாகும். உங்கள் O/L  அடைவுகள் மற்றும் பெறுபேறுகளை நேர்மையாக மீளாய்வு செய்த பின்னர் முடிவுகளை எடுங்கள்:

  • கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்கள் உங்களுக்கு இலகுவாக இருந்தனவா?
  • உயர்தரப் பாடத்திட்டத்தை இரண்டு வருடங்கள் சலிப்படையாமல் உங்களால் தொடர முடியுமா?

3. சமூக அந்தஸ்தை விட எதிர்கால வாய்ப்புகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்

சமூக ரீதியில் இலங்கையில் மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகளுக்கு அதிக மதிப்புக்கள் கொடுக்கபடுகின்றது என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் தற்போது தொழில் உலகம் மாறும் தொழில்வாய்ப்புச் சந்தையானது மாறி வருகின்றது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். தற்போது தரவு விஞ்ஞானம் (Data Science), நிதிப் பொறியியல் (FinTech), விநியோகச் சங்கிலி முகாமைத்துவம் (Logistics), சுற்றுலாத்துறை, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் போன்ற துறைகளில் இன்று உலகளாவிய ரீதியில் அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன. எனவே, உங்கள் விருப்பத்திற்கும் ஆர்வத்திற்குமுரிய துறையைத் தெரிவு செய்யுங்கள்.

4. பல்கலைக்கழக அனுமதி விதிகளைத் தெரிந்திருங்கள் (UGC Handbook)

அரசுப் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல விரும்பினால், UGC கையேட்டை ஒருமுறை அவதானியுங்கள். சில பட்டப்படிப்புகளுக்கு (உதாரணமாக: கட்டிடக்கலை அல்லது அளவையியல்) உயர்தர பாடங்களோடு, சாதாரண தர ஆங்கிலம் அல்லது கணிதத்தில் குறிப்பிட்ட சித்தியும்  அவசியமாகும்.

5. "நண்பர்களுக்காகத் அல்லது உறவுகளுக்காக தெரிவு செய்தல்" எனும் பொறியில் சிக்காதீர்கள்

இலங்கை மாணவர்கள் பலரும் தங்கள் நண்பர்கள் ஒரு குறிப்பிட்ட பாடத்துறையை அல்லது ஒரு மேலதிக வகுப்புக்கு (Tuition Class) செல்வதால் அதையே தானும் தெரிவு செய்யும் மனநிலையில் இருக்கின்றார்கள். அல்லது தான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உறவுகள் சொல்லும் தங்கள் உறவுகளின் வர்புறுத்தல்களுக்காகவும் உயர்தரத் துறைகளை தெரிவு செய்யும் நிலையிலும் இருக்கின்றார்கள். நினைவில் கொள்ளுங்கள்: Z-புள்ளி என்பது தனிப்பட்டது. உங்கள் தனிப்பட்ட திறமைக்கு ஏற்ற துறையை மட்டுமே நீங்கள் தேர்ந்தெடுப்பது உங்கள் எதிர்கலத்திற்குப் பொருத்தமாக அமையும்.

மாணவர்களுக்கான விசேட ஆலோசனை

உயர்தர வகுப்புகள் ஆரம்பிப்பதற்கு இடைப்பட்ட இந்தக் காலப்பகுதியில், உங்கள் ஆங்கில அறிவு மற்றும் கணினித் திறனை (ICT) வளர்த்துக்கொள்ளும் ஒரு குறுகிய காலப் படிப்பை மேற்கொள்ளலாம். நீங்கள் எந்தத் துறையைத் தெரிவு செய்தாலும் இவை இரண்டும் உங்கள் வெற்றிக்கு மிக அவசியமாகக் காணப்படும்.

"உங்கள் உயர்தரத் தெரிவு என்பது உங்கள் எதிர்காலத் தொழில் வாழ்விற்கான பாலம். அதை மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்காக அல்லாமல், உங்கள் விருப்பம் மாறும் திறமையின் அடிப்படையில் கட்டியெழுப்புங்கள்."

உங்களுக்குப் பொருத்தமான பாடத் தெரிவுகள் அல்லது எதிர்காலத் தொழில் வாய்ப்புகள் பற்றி மேலதிக வழிகாட்டல் தேவையெனில் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.


--------------------------------------------------------------------------------------------------

JOIN WITH US FOR CAREER GUIDANCE SERVICES AND VACANCIES UPDATES

About the Author

ALM. Nibras (HRDO) Career Counselor & Human Resource Development Officer

நிப்ராஸ் ஒரு அனுபவம் வாய்ந்த மனிதவள மேம்பாட்டு அதிகாரி (HRDO) மற்றும் அங்கீகாரம் பெற்ற தொழில் வழிகாட்டி (Career Counselor) ஆவார். இவர் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பணியாற்றுவதுடன், "VocatioVista" ஊடாக இளைஞர் யுவதிகளின் எதிர்காலக் கனவுகளை நனவாக்க வழிகாட்டி வருகிறார்.

இலங்கையின் கல்வி முறைமை மற்றும் மாறிவரும் வேலைவாய்ப்புச் சந்தை குறித்த ஆழமான அறிவைக் கொண்டுள்ள இவர், மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கான சரியான உயர்கல்வி மற்றும் தொழில் பாதைகளைத் தெரிவு செய்ய உதவுகிறார். ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குத் தொழில்சார் ஆலோசனைகளை வழங்கியுள்ள நிப்ராஸ், சமூக ஊடகங்கள் மற்றும் நேரடிப் செயலமர்வுகள் வாயிலாக இளைஞர் வலுவூட்டலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

💼 Focus Areas: Career Guidance | Career Counseling | Business Counseling | Business Motivation

📧 Email: vocatiovista@gmail.com

📞 Phone: +94 77 585 8636

🔗 Follow Us on our Social Media: 

📨 WhatsApp  🌍 Website  📘 Facebook  📸 Instagram  🎥 TikTok  ▶️ YouTube

---------------------------------------------------------------------------------------------

Comments

Popular posts from this blog

Apply Now: TVEC Vacancies - 2025 | பதவி வெற்றிடங்கள் - மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு

Posts of Driver and Conductor - Sri Lanka Transport Board (SLTB) | சாரதி மற்றும் நடத்துநர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பம்

மாணவர்களின் கல்வித்திறன் விருத்தி: டிஜிட்டல் டிடாக்ஸ் (Digital Detox) மற்றும் நேர முகாமைத்துவம்.

FOLLOW ME ON SOCIAL MEDIA