க. பொ. த. உயர்தர கலைப்பிரிவு மாணவர்களுக்கு Data Scientist ஆவது சாத்தியமா? Is it possible for GCE A/L Arts Stream students to become Data Scientist?

க. பொ. த. உயர்தர கலைப்பிரிவில் கற்ற / கற்கும்  மாணவர்களுக்கு Data Scientist ஆவது சாத்தியமா?


ஆம், இது முழுமையாக சாத்தியம் எனக் கூறலாம். 

முதலில் Data Science என்றால் என்ன? கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் கலைப்பிரிவில் கற்ற ஒரு மாணவர் எவ்வாறு ஒரு Data Scientist ஆக வரமுடியும்? அதற்கான தொழில் முறை வாழ்க்கைப் பாதை என்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

Data Science என்றால் என்ன?

Data Science என்பது ஒரு பரந்த துறையாகும். இது அதிகப்படியான மற்றும் சிக்கலான தரவுகளிலிருந்து (data) எமக்குப் பயனுள்ள தகவல்களை கணினி மற்றும் புள்ளிவிபரவியல் (statistics) மூலம் பகுப்பாய்வு செய்து தங்களுக்கானஎதிர்காலத்தைக் கணிக்கவும், சரியான முடிவுகளை எடுக்கவும் உதவும் ஒரு அறிவியல் முறையாகும். 

எளிமையாகச் சொன்னால், எம்மிடம் உள்ள பழைய தரவுகளைக் கொண்டு, எதிர்காலத்தினைத் திட்டமிடுவதற்கும் முடிவுகள் எடுப்பதற்கும் உதவும் ஒரு துறையாகும். 

இன்று Data Scientist அல்லது Data Analyst களாக தொழில் புரியும் அநேகமானோர், கலைப்பிரிவு (Arts), முகாமைத்துவம் (Management), சமூக விஞ்ஞானம் (Social Science), பொருளாதாரம் (Economics) மற்றும் புள்ளிவிபரவியல் (Statistics) பின்னணியிலிருந்து வந்தவர்களாகவே இருக்கின்றனர். இங்கே, நீங்கள் எந்த துறையில் கல்வி கற்றுள்ளீர்கள், என்ன பட்டம் (degree) வைத்துள்ளீர்கள் என்பதல்ல முக்கியம், மாறாக உங்களிடம் என்ன திறன் + பயிற்சி + திட்டங்கள் (Skills + Practice + Project) இருக்கின்றது என்பதே மிக முக்கியமானது. 

நீங்கள் ஒரு Data Scientist அல்லது Data Analyst வர வேண்டுமாக இருந்தால், உயர்தரத்தில் நீங்கள் கலைப்பிரிவில் கற்று, பரீட்சை எழுதிய பின் பின்வருமாறு உங்கள் தொழில்முறை வாழ்க்கைப் பாதையினைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். 

1. அடிப்படைத் திறன்களைக் கருக்கொள்ளுதல். 

  • அடிப்படை கணிதம் மற்றும் புள்ளிவிரவியல்: இதில் percentages, Algebra மற்றும் graphs போன்றனவும் Mean, Median, Mode, Probability, Charts and Graphs போன்ற Statistical விடயங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும். இதனைக் கற்றுக் கொள்ள நீங்கள் முற்றிலும் இலவச நிகழ்நிலை (online) பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ளலாம். உதாரணமாக: Khan Academy, Coursera, edX, Udemy, google
  • தர்க்கரீதியான சிந்தனை (logical thinking), பிரச்சினைகளைத் தீர்த்தல் (problem solving), பகுப்பாய்வு சிந்தனை (analytical thinking) மற்றும் முடிவெடுக்கும் திறன் (decision making) போன்ற மென்திறன்களை வளர்த்துக் கொள்ளல். இதற்காக பகுத்தறிவு மற்றும் பகுப்பாய்வு சிந்தனைப் பயிற்சிகளை செய்தல்.
  • அடிப்படைக் கணணி அறிவு: Excel, Google Sheets, and digital literacy போன்ற அடிப்படை கணினி அறிவுகளைப் பெற்றுக்கொள்ளல்.  

2. Programming மற்றும் பகுப்பாய்வுக் கருவிகளைக் (analytical tools) கற்றுக் கொள்ளல்: Data Science ஆனது நிரலாக்கம் (programming) மற்றும் தரவுகளிலேயே பெரிதும் தங்கியுள்ளது. இதன் காரணமாக நீங்கள் குறிப்பிட்ட பயிற்சிநெறியைத் தொடர முன் முடிந்தவரை இவற்றைக் கற்றுக் கொள்ளுங்கள். கடாயமாகத் தெரிந்து கொள்ளவேண்டிய கருவிகள்:

  • Python: data science இல் பரந்தளவில் உபயோகப்படுத்தும் ஒன்று.
  • R: இது ஒரு புல்லிவிபரவியளுக்காகப் பயந்தப்படும் நிரலாக்கம் (programming tool)
  • SQL:  தரவுத்தளங்களை நிர்வகிக்கப் பயன்படும் 
  • Excel மற்றும் Google sheets: அடிப்படை தரவுப் பகுப்பய்வுக்காகப் பயன்படுத்த
  • Power BI மற்றும் Tableau:  தரவுகளைக் காட்சிப் படுத்த

இவற்றினைக் இலவசமாகக் கற்றுக்கொள்ள: Coursera, Udemy, DataCamp, or Google Certificates (google data analytics) போன்ற தளங்களை அணுகலாம். 

3. உயர்கல்வி மற்றும் பயிற்சிப் பாதைகளைத் தெரிவுசெய்தல் - Choose higher Education or Training Pathways: 

இங்கு இலங்கையில் கலைப்பிரிவு மாணவர்களுக்கு இருக்கும் வழிகள் காட்டப்பட்டிருக்கின்றது.

தெரிவு 01: டிப்ளோமா முதல் பட்டப்படிப்பு வரையான பாதை: நீங்கள் கலைப்பிரிவு மாணவர்களாக இருப்பதால், Diploma in Data Science, IT, அல்லது Computing போன்ற பயிற்சி நெறிகளிலிருந்து தொடங்கலாம். இலங்கையில் STEM பின்னணி இல்லாத மாணவர்களுக்கு இவ்வகை பயிற்சி நெறிகளை பின்வரும் நிறுவனங்கள் வழங்குகின்றன.

  1. SLIIT (Sri Lanka Institute of Information Technology) - Foundation/Diploma in IT ‣ BSc in Data Science / IT
  2. IIT (Informatics Institute of Technology) - Foundation in IT ‣ BSc in Data Science
  3. ESOFT Metro Campus - Diploma in Data Science / Diploma in IT
  4. ICBT Campus / NIBM - Foundation in computing ‣ Higher Diploma ‣ BSc in Data Science
  5. Open University of Sri Lanka (OUSL) - Foundation in IT ‣ BSc in Information Technology 
  6. British Council / Edexcel - Foundation or HND Program leading to UK Degrees in Data Analytics.
தெரிவு - வெளிநாட்டு அல்லது நிகழ்நிலை பட்டங்கள் - Foreign or Online Degrees: நீங்கள் நெகிழ்வான மற்றும் செலவு குறைந்த வழிகளை விரும்பினால்:

  1. Google Professional Certificate in Data Analytics (recognized globally) 
  2. IBM Data Science Professional Certificate (Coursera)
  3. BSc Data Science / Computer Science (online - university of London, Open University UK)

4. Gain Practical Experience: கற்கின்ற காலப்பகுதிகளில் சிறு திட்டப் பணிகளைச் (projects) செய்து, உங்களது திறமைகளை வெளிப்படுத்தும் தொகுப்புக்களை (portfolios) உருவாக்கி நடைமுறை அனுபவத்தைப் பெறுங்கள் - While studying, build experience with small projects and portfolios.

  • Kaggle அல்லது GitHub போன்றவற்றில் சிறு சிறு திட்டங்களைச் செய்து அனுபவங்களைப் பெறுதல் - doing small projects on Kaggle or GitHub. (Kaggle என்பது தரவு விஞ்ஞானிகளுக்கான ஒரு தளம். இங்கே காணப்படும் சவால்களில் (challenges) பங்கேற்பதன் மூலம் நிஜ உலகத் தரவுகளை எவ்வாறு கையாள்வது என்று பழகலாம். GitHub என்பது நீங்கள் செய்யும் குறியீடுகளை (codes) இங்கே சேமித்து வைப்பதன் மூலம், உங்கள் திறமைகளை நிறுவனங்களுக்கு நிரூபிக்கலாம்.)
  • தனிச்சுதந்திர (freelance) அல்லது பகுதி நேர தரவு உள்ளீடுகள் / பகுப்பாய்வு வேலைகளில் ஈடுபடுதல் - Freelance or part-time data entry/analysis jobs
  • ஆய்வு, IT, அல்லது டிஜிட்டல் சந்தை நிறுவனங்களில் பயிற்சி தொழில்களில் (internship) ஈடுபடுதல் - internship with research, IT, or digital marketing firms.

5. விசேடத்துவம் மற்றும் முன்னேற்றம் - Specialize and advance: உங்களது பட்டப்படிப்பு அல்லது டிப்ளோமா பயிற்சி நெறிக்குப் பின்னர், உங்கள் ஆர்வங்கள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் மேலும் பல இலவச மற்றும் பொருத்தமான விடயங்களில் நிபுணத்துவத்தையும் விசேடத்துவத்தையும் பெறுங்கள். பிரயோசனமான விடயங்களாக:

  • Data analytics
  • Machine learning
  • Business intelligence
  • Artificial intelligence 
  • Big data engineering 
  • Data visualization and reporting 
இலங்கையில் காணப்படும் இத்துறைசார் பட்டப்பின் படிப்புத் தெரிவுகள்:

  1. University of Colombo School of Computing (UCSC) - MSc in Data Science / AI
  2. SLITT / IIT / NIBM - Master's in Data Analytics / AI

6. இத்துறையில் காணப்படும் பிரதான தொழில் வாய்ப்புக்கள் - Career Opportunities in Data Science:  நீங்கள் மேற்சொன்ன திறன்களில் பாண்டித்தியம் பெற்றபின், பல வகையான தொழில்களில் பணியாற்றக் கூடிய வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். அவையாவன:

  • Data Analyst - analyze business data, prepare reports
  • Data Scientist - build predictive models, use AI & MI
  • Business Intelligence Analyst - interpret business data for decision making
  • Machine Learning Engineer - design ML algorithms 
  • Data Engineer - manage and clean large datasets 
  • Research Analyst - work in academic or development research fields.

இத் தொழிற்பாதையின் சுருக்கம் பின்வருமாறு: 



--------------------------------------------------------------------------------------------------

JOIN WITH US FOR CAREER GUIDANCE SERVICES AND VACANCIES UPDATES

💼 Focus Areas: Career Guidance | Career Counseling | Business Counseling | Business Motivation

📧 Email: vocatiovista@gmail.com

📞 Phone: +94 77 585 8636

🔗 Follow Us on our Social Media: 

📨 WhatsApp  🌍 Website  📘 Facebook  📸 Instagram  🎥 TikTok  ▶️ YouTube




Comments

Popular posts from this blog

Apply Now: TVEC Vacancies - 2025 | பதவி வெற்றிடங்கள் - மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு

Apply Now: Open Competitive Examination for Recruitment to Grade III of Management Service Officers (MSO) – 2024/2025

Posts of Driver and Conductor - Sri Lanka Transport Board (SLTB) | சாரதி மற்றும் நடத்துநர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பம்

FOLLOW ME ON SOCIAL MEDIA