உயர்தரப் (A/L) பரீட்சைக்குப் பின் என்ன செய்ய வேண்டும்? | 2025/2026 இலங்கை மாணவர்களுக்கான முழுமையான Career Guide | VocatioVista

2025/2026 A/L முடித்த இலங்கை மாணவர்களுக்கான தெளிவான career வழிகாட்டி. A/L முடிவுகள் வருமுன் & பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை அறியுங்கள் – VocatioVista. 🎓 What Should I Do After the A/L Exam?

நீங்கள் தற்போது க. பொ. த. உயர்தரப் பரீட்சையை முடித்து விட்டீர்களா? இப்போது உங்கள் மனதில் எழும் மிக முக்கியமான கேள்வி: A/L பரீட்சை முடிந்த பிறகு நான் என்ன செய்யவேண்டும்? என்பதேயாகும். 

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு மைல்கல்லை தற்போது கடந்துள்ளீர்கள். இலங்கை கல்வி முறையில் இந்த உயர்தரக் கல்வியானது ஒவ்வொரு மாணவரது வாழக்கையிலும் தங்களது எதிர்காலத்தை சிறப்பாக திட்டமிடுவதற்கும் சிறந்த தொழிற்கல்வி முடிவுகளை எடுப்பதற்குமான ஒரு முக்கிய கட்டமாக விளங்குகின்றது. இந்த உயர்தரப் பரீட்சை முடிவடைந்த காலம் என்பது:

📌உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகும் வரை உள்ள காலம் 

📌எதிர்காலம் பற்றிய குழப்பங்கள் தோன்றும் காலம்

📌பெற்றோரது மற்றும் சமூகங்களது அழுத்தம் பிரயோகிக்கப்படும் காலம் 

போன்றவற்றை கொண்டதாக உள்ளதாகும். இந்த கால கட்டத்தில் வீடுகளில் சும்மா இருக்காமல், இந்த பொன்னான நேரத்தை உங்களது எதிர்காலத்திற்காக எவ்வாறு முதலீடு செய்யலாம் என்பதை பாருங்கள். 

🕒முதலாம் கட்டம்: உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகும் வரை உள்ள காலம்: இந்தக் காலப்பகுதி மிகவும் பெறுமதியான ஒரு காலப் பகுதியாகும்.

❌ இது காலத்தை நேரத்தை வீணாக்கிக் கொண்டு வெறுமனே சும்மா காத்திருக்கும் காலம் அல்ல.  

இந்த நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தினால், இதன் மூலம் எதிர்காலத்தில் தொழில் வாய்ப்புக்கள் மற்றும் தொழில் உலகம் பற்றி ஏற்படும் குழப்பங்களைக் குறைக்கலாம, எதிர்கால தொழில்முறை வாழக்கை பற்றிய சரியான தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியுமானதாக இருக்கும், மற்றும் மற்றவர்களை விட நாமும் முன்னிலை பெறக்கூடியதாக இருக்கும். இந்தக் காலத்தை பயனுள்ள வகையில் கழிக்க சில வழிகள் இதோ:

1. தொழில் உலகு பற்றியும் அதன் போக்குகள் பற்றியும் அறிந்துகொள்வது (Career Awareness on World of Work and trends)

இந்த இடைப்பட்ட காலமானது எதிர்கால தொழில் உலகம், அதனுடைய போக்குகள், அதனுடைய தேவைப்பாடுகள் போன்ற பல விடயங்களை ஆராய்நதறிவதற்க்கு சிறந்த நேரமாக இருக்கின்றது. இதில் நீங்கள்: வெவ்வேறு தொழிற்துறைகள் பற்றி அறிந்து கொள்ளலாம், இலங்கையில் உள்ள பாடநெறிகள் என்ன, அவை எவ்வாறு எதிர்கால் தொழில் உலகத்திற்குப் பொருந்தும், வேலைவாய்ப்புக்கள் மற்றும் வருமான நிலை போன்றவற்றை அறிந்துகொள்ள்ளுதல், தொழில்முனைவோர் (entrepreneur) மற்றும் டோளிலாலர்களின் அனுபவங்களைக் கேட்டறிதல் போன்ற பல விடயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். இதன்மூலம் முடிவுகள் எடுக்கவேண்டிய தருணங்களில் அவசரமான மற்றும் தவறான முடிவுகள் எடுக்கவேண்டிய நிலையிலிருந்து இது தவிர்க்கும்.

2. உங்கள் ஆர்வம் மற்றும் திறன்களை அறிந்து கொள்ளுதல் (Know your Strength, interests, and skills)

உங்களைப் பற்றி நீங்களே வினாக்களைத் தொடுத்து உங்களைப் பற்றி  நீங்களே அறிந்துகொள்ளுங்கள். எந்த பாடங்கள் எனக்குப் பிடித்தது? எனக்கு எது இயல்பாக வரும்? எது எனக்கு மிகவும் பிடிக்கும்? நான் மற்றவர்களுடன் வேலை செய்ய விரும்புகிறேனா? தொழில்நுட்பம், கணினி அல்லது நடைமுறைசார் தொழில்கள் எனக்கு பிடிக்குமா? போன்ற பல கேள்விகளுக்கு விடைகளைக் கண்டுபிடியுங்கள். இதற்காக நீங்கள்:

  • திறன் மதிப்பீடு (Aptitude Test)
  • பல் நுண்ணறிவுப் பரீட்சை (MI Test)
  • Career Interest Test / Career Key Test

போன்ற பரீட்சைகள் மூலம் உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் தவறான பாடத்தெரிவுகள், விருப்பமான தொழிற்தெரிவுகள் போன்றவற்றை அறிந்துகொள்ள உதவும்.  

3. புதிய மற்றும் நவீன திறன்களைக் கற்றுக்கொள்வது 

இன்றைய நவீன உலகில் புள்ளிகளை விட திறன்களுக்குத்தான் மதிப்புகள் அதிகம். எனவே இந்த இடைவெளியில் குறைந்தது சில பயனுள்ள திறன்களை வளர்த்துக்கொள்வது சிறந்தது.முக்கியமாக:

  • கணினி அடிப்படையறிவு & MS Office
  • Digital Marketing
  • Graphic Designing
  • Video Editing
  • Web Development
  • Data & IT 
  • Languages
📌 குறைந்த செலவுகளில் இதனைக் கற்றுக்கொள்ளுங்கள்
📌நிகழ்நிலை (online அல்லது offline ஊடக இந்தத் திறன்களை வளர்த்துக் கொள்ளலாம்.
📌 வீட்டிலிருந்தவாறே இவற்றினைக் கற்றுக்கொள்ள முடியும்.

4. ஆங்கில மொழியறிவு மற்றும் தொடர்பாடல் திறன் விருத்தி 

நீங்கள் எந்தத் துறைக்குச் சென்றாலும் அல்லது எந்தத் துறையைத் தெரிவுசெய்தாலும் அங்கு ஆங்கிலப் புலமை முக அவசியமானதொன்றாக இருக்கின்றது.எதாவது ஒரு சிறந்த நிறுவனத்தில் இணைந்து  உங்களது ஆங்கில மொழிப்புலைமையை வளர்த்துக்கொள்ளுங்கள். இது பல்கலைக்கழகத்திற்கும் பெரிய நிறுவங்களில் பயிற்சிகளைப் பெறுவதற்கும் தொழில் நேர்காணல்களுக்கும் பெரிதும் உதவும். 

5. குறுகியகால பாடநெறிகள் (Short-term Courses)

உங்களது தேர்வு முடிகள் வரும்வரை காத்திராமல், உங்களால் முடிந்த உங்களுக்கு எதிர்காலத்தில் மிகவும் உதவும் என்று நீங்கள் நினைக்கின்ற குறிகியகால பாடநெறிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். 

  • Certificate Courses
  • Foundation Programs
  • IT Basic Courses
  • NVQ அறிமுக பாடநெறிகள்
  • Professional Orientation Classes 

👉எதிர்காலத்தில் உங்களது தொழில் வாழ்க்கை மாறினாலும் நீங்கள் கற்றது எப்போதும் வீணாகாது. 

6. தன்னார்வ சேவைகள் மற்றும் பகுதிநேர வேலைகள்:

வாய்ப்புக்கள் இருந்தால், உங்களை நீங்கள் சமூக சேவைகளில் ஈடுபடுத்திக் கொள்ளலாம், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பகுதிநேர உதவியாளர்களாக பணியாற்றலாம், தற்காலிக அடிப்படையில் எதாவது தொழில்களில் ஈடுபடலாம். இதன் மூலம், உண்மையான வேலை அனுபவங்களைப் பெர்ருக்கொல்லாம், பொறுப்புணர்வுகளை வளர்த்துக் கொள்ளலாம், எதிர்கால தொளில்தேடல்களுக்கு இவை உதவலாம்.

7. தொழில் வழிகாட்டல்களைப் (Career Guidance) பெறுதல்:

உங்களது தவறான முடிவுகள் மற்றும் சிந்தனைகள் உங்களது வாழ்க்கையை பல ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளும். எனவே சிறந்த பொருத்தமான தொழில் வழிகாட்டல்கள் மூலம், சிறந்த எதிர்காலத் திட்டமிடல்களை தயாரிக்கலாம், உங்களது விருப்பம் மற்றும் திறன்களுக்கேற்ற தொழிற்பாதைகளை அறிந்துகொள்ளலாம், பொருத்தமான தொழில் வழிகாட்டுதல்களைப் பெற்றுக்கொள்ள இதுவே சிறந்த நேரம். 

🕒இரண்டாம் கட்டம்: சரியான வாழ்க்கைப் பாதையைத் தெரிவுசெய்தல் 

இலங்கையில் உயர்த்தப் பெர்பேறுகள் கிடைக்கப்பட்ட பிறகு பிரதானமாக நாகு வழிகள் அல்லது தெரிவுகள் காணபடுகின்றன. அவையாவன:

  1. அரச பல்கலைக்கலங்களுக்கு தெரிவாதல் (State University Path): உங்களது Z-Score புள்ளிகளும் பொதுப் பரீட்சையில் (General Knowledge Test) பரீட்சைகளில் போதுமான பெறுபேறுகள் இருந்தால், இலவசமாக நீங்கள் அரச பல்கலைக்கழகங்களில் நுழையலாம். 
  2. தனியார் பல்கலைக்கழகங்கள் (Private Universities): விரைவாகப் படித்து பட்டம் பெற்று தொழில் உலகத்திற்குச் செல்ல விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தெரிவு. SLIIT, NSBM, IIT, APIIT, Horizon Campus, Ocean University போன்ற நிறுவனங்களில் சர்வதேச தரத்திலான பட்டப்படிப்புக்களைக் கற்று இலகுவாக தொழில்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
  3. தொழிற்துறைக் கற்கைநெறிகள் (Professional Qualification): சிலநேரங்களில் பட்டப்டிப்புக்களை விட இவ்வகை கற்கைநெறிகள் இலகுவாக தொழில்களைப் பெற்றுத்தரும். CA Sri Lanka, CIMA, ACCA, CIM, SLIM, CIPM, LLB, HRM, MBA போன்ற பல....
  4. சுய தொழில்முனைவு: இதுவம் உங்களுக்கான சிறந்த தெரிவாக இருக்கும். சுய தொழில்களில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள். சிறு வியாபாரம், online business, home-based industry, agriculture and food business போன்றன. ஆனால் இவற்றுக்கு சிறந்த வழிகாட்டல் மற்றும் பயிற்சிகள் இல்லாமல் ஆரம்பிப்பது பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். 

💡 மாணவர்களுக்கான சில முக்கிய ஆலோசனைகள்

  • நண்பர்களைப் பின்தொடராதீர்கள்: உங்கள் நண்பர் ஒரு பாடத்தைத் தெரிவு செய்கிறார் என்பதற்காக நீங்களும் அதைச் செய்யாதீர்கள். உங்கள் ஆர்வம் எது என்பதில் தெளிவாக இருங்கள்.

  • இரட்டைத் தகைமை (Double-Threat Strategy): ஒரு பட்டப்படிப்பைச் செய்துகொண்டே (Degree), பகுதி நேரமாக ஒரு தொழில்முறைப் படிப்பைச் (CIMA/CIM) செய்வது உங்களை மற்றவர்களை விட முன்னிலையில் வைக்கும்.

  • NVQ சான்றிதழ்கள்: கைத்தொழில் அல்லது தொழில்நுட்பத் துறையில் ஆர்வம் இருந்தால், NVQ Level 5, 6, 7 நிலைகள் ஒரு பட்டப்படிப்பிற்கு சமமானவை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு மிகவும் உகந்தவை.

A/L பரீட்சை முடிவுகள் முக்கியம்தான் ஆனால் அதைவிட

👉நீங்கள் இந்த இடைப்பட்ட காலத்தை எவ்வாறு பயனுள்ளதாக பயன்படுத்துகின்றீர்கள்
👉எவ்வாறு உங்களது இக்காலத்தையும் எதிர்காலத்தையும் திட்டமிடுகின்றீர்கள்

என்பதிலேயே உங்கள் எதிர்கால தொழில்முறை வாழக்கை தங்கியுள்ளது என்பதை மறவாதீர்கள்.

"உங்கள் எதிர்காலத்தை நீங்களே செதுக்க இதுவே சிறந்த தருணம்!" ஒரு வாரம் ஓய்வு எடுத்துவிட்டு, உங்கள் அடுத்த கட்டத்தைப் பற்றி ஆலோசிக்கத் தொடங்குங்கள்.

📌 தொழில் வழிகாட்டல், career awareness & சரியான தொழிற்பாதைத் தேர்வுக்கு தொடர்ந்து VocatioVista உடன் இணைந்திருங்கள்.


--------------------------------------------------------------------------------------------------

JOIN WITH US FOR CAREER GUIDANCE SERVICES AND VACANCIES UPDATES

💼 Focus Areas: Career Guidance | Career Counseling | Business Counseling | Business Motivation

📧 Email: vocatiovista@gmail.com

📞 Phone: +94 77 585 8636

🔗 Follow Us on our Social Media: 

📨 WhatsApp  🌍 Website  📘 Facebook  📸 Instagram  🎥 TikTok  ▶️ YouTube

Comments

Popular posts from this blog

Apply Now: TVEC Vacancies - 2025 | பதவி வெற்றிடங்கள் - மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு

Apply Now: Open Competitive Examination for Recruitment to Grade III of Management Service Officers (MSO) – 2024/2025

Posts of Driver and Conductor - Sri Lanka Transport Board (SLTB) | சாரதி மற்றும் நடத்துநர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பம்

FOLLOW ME ON SOCIAL MEDIA