மாணவர்களின் கல்வித்திறன் விருத்தி: டிஜிட்டல் டிடாக்ஸ் (Digital Detox) மற்றும் நேர முகாமைத்துவம்.
மாணவர்களின் கல்வித்திறன் விருத்தி: மின்னணு (Digital) சாதனங்களின் பயன்பாட்டைக் குறைப்பது அல்லது தவிர்ப்பது (Digital Detox) மற்றும் நேர முகாமைத்துவம் (Time Management). இன்றைய டிஜிட்டல் உலகில் வாழும் மாணவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்னவென்றால், அது கைத்தொலைபேசியும் சமூக ஊடங்களும் என்றால் மிகையாகாது. இந்த இரு விடயங்களும் மாணவர்களின் கல்வி நேரத்தினை கொஞ்சம் கொஞ்சமாக விளுங்கிவருகின்றது என்பதே உண்மை. அனால் சரியான நடமுறைகளைக் மாணவர்கள் நடக்கும் போது, இந்த நிலைமையினை மாற்றியமைக்க முடியும். அதற்கான ஆய்வுகளின் மூலம் னுநிரூபிக்கப்பட்ட இரண்டு நடைமுறை வழிமுறைகளை இக்கட்டுரை விளக்குகின்றது - டிஜிட்டல் டிடாக்ஸ் மற்றும் நேர முகாமைத்துவம்.