The Secret to Speaking: உங்கள் பேச்சால் மற்றவர்களைக் கவர வேண்டுமா? பேசும் போது தடுமாறுகின்றீர்களா?
உங்கள் பேச்சால் மற்றவர்களைக் கவர வேண்டுமா? பேசும் போது தடுமாறுகின்றீர்களா? இதோ அதற்கான தீர்வு! நீங்கள் எப்போதாவது ஒரு பேச்சாளர் குறிப்புக்களையோ, திரைகளையோ பார்க்காமல் சிறந்த கவர்ச்சிமிகு உரைகளை நிகழ்த்துவதைப் பார்த்திருக்கின்றீர்களா? அவர்கள் எவ்வாறு அப்படிப் பேசுகின்றார்கள் என்று யோசித்திருக்கின்றீர்களா? அவர்களுக்கு ஏதாவது ஒரு அசாத்திய நினைவாற்றல் இருக்கின்றதா? அல்லது அவர்கள் மட்டும் என்ன கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களா? இல்லை! அவர்கள் இதற்காக ஒரு முறையை பின்பற்றுகின்றார்கள். அது அவர்களை நம்பிக்கையுடன் பேசவும், தங்கள் முக்கிய கருத்துக்களை நினைவில் வைத்திருக்கவும், திரையினையோ துண்டுப் பத்திரிகைகளையோ நம்பாமல் தங்களது கருத்துக்களை மற்றவர்கள் இரசிக்கும் விதத்தில் பேசுவதற்கும் அவர்களுக்கு அது உதவுகின்றது. நீங்களும் இதனை சரியான முறையில் முயற்சிசெய்தால், உங்களாலும் ஒரு சிறந்த பேச்சாளராக வளர முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது… பேச்சு (speaking) என்பது வெறுமனே எமது வார்த்தைகளின் தொகுப்போ, சம்பாசனையோ அல்ல: மாறாக அது நமது எண்ணங்களை, நோக்கங்களை, மற்றும் நமது உணர்வுகளை மற்றவர்களுக...