The Secret to Speaking: உங்கள் பேச்சால் மற்றவர்களைக் கவர வேண்டுமா? பேசும் போது தடுமாறுகின்றீர்களா?
உங்கள் பேச்சால் மற்றவர்களைக் கவர வேண்டுமா? பேசும் போது தடுமாறுகின்றீர்களா? இதோ அதற்கான தீர்வு!
இல்லை!
அவர்கள் இதற்காக ஒரு முறையை பின்பற்றுகின்றார்கள். அது அவர்களை நம்பிக்கையுடன் பேசவும், தங்கள் முக்கிய கருத்துக்களை நினைவில் வைத்திருக்கவும், திரையினையோ துண்டுப் பத்திரிகைகளையோ நம்பாமல் தங்களது கருத்துக்களை மற்றவர்கள் இரசிக்கும் விதத்தில் பேசுவதற்கும் அவர்களுக்கு அது உதவுகின்றது.
நீங்களும் இதனை சரியான முறையில் முயற்சிசெய்தால், உங்களாலும் ஒரு சிறந்த பேச்சாளராக வளர முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது…
பேச்சு (speaking) என்பது வெறுமனே எமது வார்த்தைகளின் தொகுப்போ, சம்பாசனையோ அல்ல: மாறாக அது நமது எண்ணங்களை, நோக்கங்களை, மற்றும் நமது உணர்வுகளை மற்றவர்களுக்குக் கடத்தும் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம். “புத்து பேர் முன்னாடி தைரியமா பேசணும்னு ஆசைப்படுகின்றீர்களா? இல்ல, நீங்க பேசுனா எல்லாரும் உன்னிப்பா கவனிக்கணும்னு நினைக்கிறீங்களா? அப்போ, இந்த ஒரு விடயத்தை மட்டும் எப்போதும் ஞாபகத்தில் வெச்சுக்கோங்க “பயிற்சியின்றி பேசாதீர்கள்” – தெளிவான சுய நம்பிக்கையுடன், மற்றவர்களை ஈர்க்கும் பேச்சுத் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்
இப்படிச் சொல்வது வெறும் வார்த்தைக்காக மட்டுமல்ல, இது ஒரு மந்திரம். பெரும்பாலானவங்க என்ன செய்வாங்கன்னா, ஏதாவது பேசணும்னு நெனச்சா, உடனே பேச ஆரம்பிச்சுடுவாங்க. எந்த முன்னாயத்தமோ எந்தத் திட்டமிடலோ இருக்காது. என்ன சொல்ல வர்றோம்னு கூட அவங்களுக்குத் தெரியாது. இப்படிப் பேசினா, அந்தப் பேச்சால எந்தப் பயனும் ஏற்படப் போவதில்ல, அது மட்டுமல்லாம அந்தப் பேச்சால யாரும் ஈர்க்கப்படப் போவதுமில்ல.
அப்போ, நாம என்ன செய்யனும்?
முதலில் சிறப்பாக தயாராகுங்கள்: ஒரு நிகழ்ச்சி, ஒரு முன்வைப்பு, அல்லது ஏன் ஒரு உரையாடல்னு எதுவா இருந்தாலும், என்ன பேசப்போறம்னு முதல்ல யோசிங்க, என்ன விடயங்களைக் கூறலாம்னு திட்டமிடுங்க, முக்கியமான விடயங்களை, அந்நிகழ்ச்சிக்கு மேலும் சுவாரஸ்யத்தைக் கூட்டும் விடயங்களை எழுதி வெச்சுக்கோங்க.
தெளிவாகப் பேசுங்க: குழப்பமான வார்த்தைகள், நீளமான வாக்கியங்கள், தெளிவில்லாத உதாரணங்கள், சொன்ன விடயங்களை அடிக்கடி மேலும் சொல்றது போன்ற எல்லா விடயங்களையும் முதலில் தூக்கியெறியுங்க. ஒரு சின்ன குழந்தைக்கும் புரியுற மாதிரி, சுருக்கமா, எளிமையான வார்த்தைப் பிரயோகங்களை பாவித்து பேசுங்க. உங்க பேச்சோட நோக்கம், என்ன சொல்ல வாரீங்க என்னான்னு தெளிவா முன்வையுங்க.
தன்னம்பிக்கையோட பேசுங்க: நீங்க பேசும் போது உங்க உடல் மொழி, முகபாவனை, பார்வை இதெல்லாம் ரெம்ப முக்கியம். நேராக நின்று, தலையை நிமிர்த்தி, கண்பார்த்து, ஏற்ற முகபாவனையோட பேசுங்க. நீங்க சொல்ல வருகின்ற விடயங்கள்ல உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் தான், அது மற்றவங்ளுக்கும் சரியான முறையில் போய்ச் சேரும்.
கவனத்தை ஈர்க்கும் விததில் பேசுங்க: வெறும் தகவல்களை மட்டும் ஒரே மாதிரி சொல்லாதிங்க. ஒரு சின்ன கதை, கேள்வி-பதில், அல்லது உதாரணங்கள், அல்லது விளக்கப் படங்கள் சேர்த்து பேசுங்க. இது கேட்கிறவங்களுக்கு சுவாரஸ்யமா இருக்கும். அவங்க கவனம் சிதறாது.
இந்த விடயங்கள அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடைய விடயங்கள. முறையான திட்டமிடல், பயிற்சி இருக்குமாக இருந்தால், உங்கள் பேச்சில் தெளிவும், தன்னம்பிக்கையும், கவர்ச்சியும் இருக்கும். இதன் மூலம், நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் மதிப்புமிக்கதாகவும் கவனத்தை ஈர்க்கக் கூடியதாகவும் மாறும்.
இது போன்ற பல பயனுள்ள விடயங்களைக் கற்றுக்கொள்ள, எமது பக்கத்தினைத் பின்தொடருங்கள்.
Public Speaking: the Secret to Speaking without notes:
JOIN WITH US FOR CAREER GUIDANCE SERVICES AND VACANCIES UPDATES
💼 Focus Areas: Career Guidance | Career Counseling | Business Counseling | Business Motivation
📧 Email: vocatiovista@gmail.com
📨 WhatsApp 🌍 Website 📘 Facebook 📸 Instagram 🎥 TikTok ▶️ YouTube


Comments
Post a Comment