வெற்றியின் முதல்படி – ஒரு தெளிவான இலக்கு | The first step to success is a clear goal.
“வெற்றியின் முதல்படி – ஒரு தெளிவான இலக்கு. இன்று உங்கள் இலக்கை எழுதுங்கள், நாளை உங்கள் கனவு நனவாகும் ” ஒரு தெளிவான தொழில்முறை வாழ்க்கை இலக்கு என்பது, உங்கள் தொழில்முறை வாழ்க்கையில் நீங்கள் அடைய விரும்பும் ஒரு குறிப்பிட்ட, அளவிடக்கூடிய குறிக்கோள் ஆகும். இது உங்கள் தொழில்முறை வாழ்க்கையை ஒரு திசையை நோக்கி வழிநடாத்த நீங்கள் நிர்ணயிக்கும் ஒரு புள்ளியாகும். இவ்வகை இலக்குகளானது, உங்களது கல்வி சம்மந்தமான இலக்குகளாக இருக்கலாம், உங்களது தனிப்பட்ட வாழ்க்கை சம்மந்தமான இலக்குகளாக இருக்கலாம், உங்களது ஆரோக்கியம் சம்மந்தமான இலக்குகளாக இருக்கலாம், உங்களது செல்வம், குடும்பம், பெறுபேறுகள் போன்ற பலவகைப்பட்டவைகளாக இருக்கலாம். இவ்வகையான இலக்குகளை நாம் பொதுவாக மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்: குறுகிய கால இலக்குகள்: குறுகிய கால இலக்குகள் என்பது, சில மாதகாலம் முதல் ஒரு வருடத்திற்குட்டபட்ட நாம் அடைய விரும்பும் இலக்குகள். உதாரணமாக: தவணைப் பரீட்கைளில் சிறந்த சித்தி பெறுவது, ஆரோக்கியத்தைப் பேணுவது, உடல் எடையைக் குறைப்பது, குறிப்பிட்ட திறன்களை வளர்த்துக்கொள்வது, குறுகிய கால பயிற்சி நெறிகளை முடிப்பது, மொழிகளைக் கற...