வெற்றியின் முதல்படி – ஒரு தெளிவான இலக்கு | The first step to success is a clear goal.
ஒரு தெளிவான தொழில்முறை வாழ்க்கை இலக்கு என்பது, உங்கள் தொழில்முறை வாழ்க்கையில் நீங்கள் அடைய விரும்பும் ஒரு குறிப்பிட்ட, அளவிடக்கூடிய குறிக்கோள் ஆகும். இது உங்கள் தொழில்முறை வாழ்க்கையை ஒரு திசையை நோக்கி வழிநடாத்த நீங்கள் நிர்ணயிக்கும் ஒரு புள்ளியாகும்.
இவ்வகை இலக்குகளானது, உங்களது கல்வி சம்மந்தமான இலக்குகளாக இருக்கலாம், உங்களது தனிப்பட்ட வாழ்க்கை சம்மந்தமான இலக்குகளாக இருக்கலாம், உங்களது ஆரோக்கியம் சம்மந்தமான இலக்குகளாக இருக்கலாம், உங்களது செல்வம், குடும்பம், பெறுபேறுகள் போன்ற பலவகைப்பட்டவைகளாக இருக்கலாம்.
இவ்வகையான இலக்குகளை நாம் பொதுவாக மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:
- குறுகிய கால இலக்குகள்: குறுகிய கால இலக்குகள் என்பது, சில மாதகாலம் முதல் ஒரு வருடத்திற்குட்டபட்ட நாம் அடைய விரும்பும் இலக்குகள். உதாரணமாக: தவணைப் பரீட்கைளில் சிறந்த சித்தி பெறுவது, ஆரோக்கியத்தைப் பேணுவது, உடல் எடையைக் குறைப்பது, குறிப்பிட்ட திறன்களை வளர்த்துக்கொள்வது, குறுகிய கால பயிற்சி நெறிகளை முடிப்பது, மொழிகளைக் கற்றுக்கொள்வது போன்ற பல விடயங்கள் இதில் அடங்கும்.
- இடைக்கால இலக்குகள்: இவ்வகை இலக்குள் சுமார் ஒரு வருடம் முதல் குறிப்பிட்ட ஐந்து வருடங்களுக்குள் அடைய நினைக்கும் இலக்குகளாகக் கொள்ளமுடியும். உதாரணமாக: பட்டப்படிப்புகளை முடிப்பது, தொழிற்பயிற்சிகளை பெற்றுக்கொள்வது, தொழிலில் மேல் நிலைகளை அடைந்து கொள்வது, சொத்து செல்வங்களை ஈட்டிக்கொள்வது, பதவியுயர்வுகளைப் பெற்றுக்கொள்வது போன்றன...
- நீண்டகால இலக்குகள்: இவ்வகை இலக்குகள் மிக முக்கியமானவைகளாக இருக்கின்றன. ஏனெனில் இவ்வகை இலக்குகள் தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அடைய நினைக்கின்ற மிகப்பெரிய இலக்குகளாகவம் உங்கள் கனவுகளாகவும் இருக்கின்றன. இவ்வகை இலக்குகளை அடைய பலவருடங்கள் ஆகலாம். உதாரணமாக: நீங்கள் உங்களது கனவுத்தொழிலினை அடைவது, பட்டப்பின் படிப்புக்களை முடிப்பது, திருமணம் மற்றும் குழந்தைகள், தலைமைப்பதவிகளைப் பெற்றுக்கொள்வது, சொந்தமாக தொழிலொன்றைத் தொடங்குவது மற்றும் ஓய்வூதியத் திட்டமிடல்கள் போன்ற பல விடயங்கள்...
ஒரு தெளிவான தொழில்முறை வாழ்க்கை இலக்கின் முக்கியத்துவம்:
- தெளிவான இலக்குகள் எமக்கு வழிகாட்டியாக செயல்படுகின்றது: ஒரு தெளிவான இலக்கானது எமது வாழ்க்கையில் ஒரு திசைகாட்டி போல் செயற்பட்டு எமது வாழ்க்கைக்கான சிறந்த வழிகாட்டியாக செயற்படுகின்றது. எமது கல்விச் செயற்பாடுகள், பயிற்சிகள், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில்கள் பற்றிய முடிவுகளை எடுப்பதற்கு இது சிறப்பாக வழிகாட்டுகின்றது. "நான் ஒரு நல்ல மாணவனாக இருக்க விரும்புகிறேன்" என்பது ஒரு பொதுவான இலக்கு. ஆனால், "நான் இந்த ஆண்டு கணிதப் பாடத்தில் 90% மதிப்பெண்கள் பெறுவேன்" என்பது ஒரு தெளிவான இலக்கு. இது நம்முடைய முயற்சிகளை ஒருமுகப்படுத்த உதவுகிறது.
- ஊக்கமளிக்கின்றது: தெளிவான இலக்குகள் எம்மை அதை நோக்கி தொடர்ந்து உழைப்பதற்கும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதற்கும் ஒரு உந்துதலைக் கொடுக்கின்றது. எமது கவனங்களை ஒரே கோட்டில் செலுத்தி, உற்பத்தித்திறனுடன் செயற்பட தூண்டுகின்றது.
- வாழ்க்கையைத் திட்டமிட உதவுகின்றது: எமது நீண்ட கால இலக்குகளைத் தெளிவான இலக்குகளாகத் தீர்மானிப்பதன் மூலம், அந்த இலக்குகளை அடையத் தேவையான நிர்வகிக்கக்கூடிய சிறிய படிகளாக மற்றும் குறுகிய கால இலக்குகாளகப் பிரித்து வெற்றிப் பாதையை அடைந்து கொள்வதற்கு சிறந்த திட்டமிடல்களை மேற்கொள்ள உதவுகின்றது.
- சுயபரிசீலனை செய்து கொள்ள உதவுகின்றது: தெளிவான இலக்குகளை அமைக்கும் போது, எமது பலங்கள், பலவீனங்கள், திறன்கள் மற்றும் எமது நுண்ணறிவுகளை மதிப்பீடு செய்ய இது தூண்டுகின்றது. மற்றும் நாம் மேம்படுத்த வேண்டிய பகுதிகளையும் அடையாளங்காண உதவுகின்றது.
இலக்குகளை ஏன் எழுத வேண்டும்?
- இலக்கு என்பது வெறும் எண்ணங்களும் கனவுகளும் அல்ல, மாறாக அது ஒரு திட்டம். அவ்வகையான இலக்குகளை எழுதும் போது தான் அது ஒரு உறுதியான திட்டமாக உருவெடுக்கின்றது, அத்துடன் எழுத்து வடிவில் இருக்கும் போது அது மேலும் உண்மையானதாகவும் உறுதியானதாகவும் இருக்கின்றது.
- எழுத்து மூலம் இருக்கும் போது தொடர்ந்து நினைவூட்டடிக் கொண்டிருக்கும். எமது நீண்ட கால இலக்கினை எழுதி, அதை நாம் தினமும் பார்க்கும் இடத்தில் ஒட்டி வைக்கும் போது, நாம் ஒவ்வொரு நாளும் நமது இலக்கினை நோக்கி உழைக்க வேண்டும் என்பதை எமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.
- இலக்கு பற்றி எழுதும் போது, அதை அடைவதற்கான வழிகள் பற்றி நாம் சிந்திக்கத் தொடங்குகின்றோம். “இந்த இலக்கினை நான் எவ்வாறு அடைந்து கொள்ள முடியும்?” எனச் சிந்திக்கும் போது, அதை அடைந்து கொள்வதற்கான சிறந்த திட்டமி;டல்களையும் நாம் மேற்கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றோம்.
S – Specific – குறிப்பிட்டுக் கூறக்கூடியதாக
M – Measurable – அளவிடக்கூடியதாக
A – Achievable – அடையக்கூடியதாக
R – Relevant – தொடர்புடையதாக / பொருந்தக்கூடியதாகT – Time-bound – காலவரையறை கொண்டதாக
அமையப்பெறும்.
![]() |
| SMART Goals |
--------------------------------------------------------------------------------------------------
JOIN WITH US FOR CAREER GUIDANCE SERVICES AND VACANCIES UPDATES
💼 Focus Areas: Career Guidance | Career Counseling | Business Counseling | Business Motivation
📧 Email: vocatiovista@gmail.com
📨 WhatsApp 🌍 Website 📘 Facebook 📸 Instagram 🎥 TikTok ▶️ YouTube


Comments
Post a Comment