தொழில் உலகம் (World of Work): எதிர்காலம், சவால்கள் & வாய்ப்புகள்! | World of Work: Future, Challenges & Opportunities

தொழில் உலகம் (World of Work) என்றால் என்ன? வாய்ப்புக்களும் சவால்களும் பற்றிய ஒரு பார்வை


இவ்வுலகில் பிறந்த அனைவரும் தாங்கள் வாழ்வதற்காக தங்களால் முடியுமான ஏதோவொரு தொழிலைச் செய்து கொண்டு அதன் மூலம் சம்பாதித்து தங்களது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். இங்கு நாம் பார்க்க இருக்கின்ற இந்த "தொழில் உலகம்" (World of Work) என்பது வெறுமனே பணம் சம்பாதிப்பது பற்றியோ பணம் சம்பாதிக்கும் வழிகள் பற்றியோ பேசுவது மட்டுமல்ல மாறாக இது நம் ஒவ்வொருவரது திறமைகள்,  ஆளுமைகள், ஆர்வங்கள், சவால்கள், தற்போதைய நிலை, எதிர்கால தொழில் போக்குகள் மற்றும் அதனது வளர்ச்சி என்பன போன்ற பல விடயங்கள் பற்றி பார்க்கப்பட வேண்டிய ஒரு பரந்த விடயமாக இருக்கின்றது. வேகமாக மாறி வரும் உலகம், தொழில்நுட்பத்தை முன்னோக்கியதான மாற்றங்கள், இந்த தொழில் உலகத்தின் போக்குகள் மற்றும் அதில் காணப்படும் வாய்ப்புக்கள் போன்ற பல விடயங்கள் பற்றி இந்த ஆக்கம் மூலம் பார்க்க இருக்கின்றோம்.

தொழில் உலகம் (World of Work) என்றால் என்ன?

தொழில் உலகம் என்பது மக்கள் செய்யும் அனைத்து வகையான சம்பளம் மற்றும் சம்பளமற்ற வேலைகளைக் கொண்ட ஒரு கலவையான தொகுதியினைக் குறிக்கின்றது. இங்கு பலதரப்பட்ட தொழில்கள் காணப்படும், அவை அரச/அரச சார்பற்ற தொழில்களாக இருக்கலாம், தனியார் துறை சார்ந்த தொழில்களாக இருக்கலாம், சுய தொழில்களாக இருக்கலாம், அல்லது வெளிநாட்டு தொழில்களாகவும் இருக்கலாம். மேலும் அத்தொழில்களில் எவ்வகையான மாற்றங்கள் ஏற்படுகின்றது, எதிர்காலத்தில் ஏற்படப் போகும் மாற்றங்கள் என்ன என்பன பற்றியும் இது விளக்குகின்றது. The World of Work refers to all kinds of paid and unpaid work people do - and how that world is changing with time.

தொழில் உலகத்தின் இன்றைய நிலை

தற்போதைய தொழில் உலகமானது முன்னர் இருந்ததைப் போலன்றி மிகவும் பாரிய மாற்றங்களைக் கொண்டமைந்ததாக இருக்கின்றது. இதில் முக்கியமானவைகளாக:

1. தொழில்நுட்பம், தானியங்கி மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பாவனை (Usage of Technology, Automation and AI): தற்போதைய தொழில் உலகத்தில் காணப்படும் பாரிய மாற்றமாகப் பார்க்கப்படுவது இந்தத் தொழிநுட்ப மாற்றமாகும். இன்று தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ரோபோக்கள், அலுவலகங்களில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள், வாடிக்கையாளர் சேவைகளில் மனிதர்களுக்குப் பதிலாக புதிய Chatbots கள், பெரிய வணிக நிறுவனங்களில் தொழிலாளர்களுக்குப் பதிலாக தானியங்கி இயந்திரங்கள் போன்றன குறிப்பிட முடியும். 

2. பசுமை மற்றும் நீடித்த நிலைத்த வளர்ச்சிப் பொருளாதாரம் (Green Economy and Sustainable Development): இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமான விடயங்களில் இன்றைய எரிபொருள் வாகனங்களுக்குப் பதிலான மின்சார (Electric) வாகனங்களின் பயன்பாடுகள், Eco - Tourism, மற்றும் Green Budling Designs, மீள் சக்தி (renewable energy) போன்றன...

3. உலக மயமாக்கல் மற்றும் தொலைநிலை தொழில்கள் (Globalization and Remote Works): இன்று பிரபலமான தொழிற் துறைகளில் தொலைதூர தொழில்கள் அதாவது நாம் உள்ளூரில் இருந்து கொண்டு அல்லது நமது வீடுகளில் இருந்து கொண்டு ஏனைய நாடுகளில் காணப்படும் பெரிய தொழில் நிறுவனங்களுடன் நிகழ்நிலை (online) ஊடாக தொழில் புரிவதை இது குறிக்கின்றது. முக்கியமாக Upwork, Freelancers, Fiverr போன்ற இணையவழி மூலமான தொழில்களை குறிப்படலாம். 

4. பிரீலன்சிங் மற்றும் சுய தொழில்முனைவுகள் (Freelancing and entrepreneurship): இன்று Upwork, Fiverr, Toptal போன்ற இணையத்தளங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் தனிதொழில்கள், பலரும் நிரந்தர அலுவலக அமைப்புகளிலிருந்து மாறி, சுதந்திரமான ஒப்பந்தப் பணிகளிலும் (Gig Economy) மட்டுமல்லாது இலங்கை போன்ற நாடுகளில் தொழில் முனைவுகளை ஊக்குவிக்கும் Youth Business Sri Lanka (YBSL), மற்றும் Enterprise Sri Lanka போன்ற நிகழ்ச்சித்திட்டங்கள்...

தொழில் உலகின் வாய்ப்புக்கள் - Thriving in a Dynamic Job Market 

தொழில் உலகம் என்பது பல்வேறு தொழில் வாய்ப்புக்களை வழங்குகின்ற மற்றும் பல்வேறு தொழில் வாய்ப்புக்கள் கொட்டிக் கிடக்கின்ற ஒரு இடமாகக் காணப்படுகின்றது. இந்த தொழில் உலக வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள:

1. தொடர்ச்சியான கற்றல்: புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களுக்கு ஏற்ப நம்மைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதால், தொழில்களில் இருக்கும் போதே புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ளவும் நமது திறன்கள், ஆளுமைகள், திறமைகள் போன்றவற்றை விருத்தி செய்துகொள்ளவும் வாய்ப்பு கிடைக்கின்றது. 

2. உலகளாவிய அணுகல்: இணையத்தின் மூலம் ஒருவர் உலகின் எந்த மூலையிலிருந்தும் தற்போதைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வேலை செய்யலாம். உள்ளூர் எல்லைகளைத் தாண்டி உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் தொழில் புரிய இது வழிவகுக்கின்றது. 

3. தனிப்பயனாக்கப்பட்ட வளர்ச்சி (Personalized Growth):  ஒவ்வொருவரும் தங்களது தனிப்பட்ட ஆர்வங்கள், திறன்கள் மற்றும் திறமைகளுக்கு ஏற்ற தொழில்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அதிகரித்துள்ளது. 

4. சமூகத்தில் பங்களிப்பு: நமது தொழில்கள் மூலம் சமூகத்தின் ஒரு பகிதுக்கு நாம் மதிப்புமிக்க பங்களிப்பைச் செய்துவருகின்றோம். இதன் மூலம் ஒரு மனநிறைவை இது தருவதுடன் சமூகத்தின் விருத்திக்கும் உதவக்கூடிய ஒரு வாய்ப்பினையும் இது தருகின்றது. 

தொழில் உலகத்தின் காணப்படும் சவால்கள் 

தொழில் உலகத்தினைப் பொறுத்தவரையில் எவ்வளவு வகையான வாய்ப்புக்கள் கொட்டிக் கிடக்கின்றனவோ அதே போல் பல தரப்பட்ட சவால்களும் அதில் காணப்படுகின்றன. ஒரு தொழில்தேடுனரால் அல்லது தொழிளாரினால் எவ்வளவுக்கு இந்த சவால்களை வெற்றிகொள்ள முடியுமோ அந்தளவுக்கு அவரினால் தனது தொழில் வாழ்கையில் வெற்றிகொள்ள முடியும். இவற்றில்: 

1. திறன்களில் இடைவெளி (Skills Gap): தொழினுட்பம் மற்றும் தொழிநுட்பப் பாவனை தற்போது வேகமாக வளர்ந்து வருவதால் தொழிலாளர்களும் அவர்களுக்குத் தேவையான தொழினுட்பத் திறன்கள், மென்திறன்களுக்கும் அவர்களிடமுள்ள திறன்களுக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளி ஏற்படுகின்றது.

2. தொழிலின்மை பற்றிய அச்சம்: தற்போதைய தொழிநுட்ப முன்னேற்றம் மற்றும் தானியங்கிமயமாக்கல் (Automation) போன்ற பல காரணிகளால் சில தொழில்களில் மாற்றங்கள் ஈற்படும் என்பதும் சில தொழில்கள் மறைந்து போகும் என்பதும் புதிதாக பல தொழில்கள் உருவாகக் கூடும் என்பது பல வல்லுனர்களின் கருத்தாக உள்ளதுடன் அது பற்றிய அச்ச உணர்வும் சமூகத்தில் நிலவுகின்றது என்பது உணமை. இருப்பினும், மாறுகின்ற நிலைக்கேற்ப நாங்களும் மாறுகின்ற போது இந்த சவாலை வெற்றிகொள்ள முடியும் என்பதும் தமக்கான புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ளவும் இவை பெரிதும் உதவுகின்றது.

3. உழைப்புச் சுரண்டல் மற்றும் தொழில் பாதுகாப்பு: பரவலாக நோக்கும் போது தற்போதைய சூழ்நிலையில் காணப்படும் தொலைதூர தொழில்கள் மற்றும் தனித்தொழில்கள் (Freelancing) களில் ஊழியர்கள் தங்களால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை அல்லது தொழில் முயற்சிகளை அவர்களது நிறுவனங்களே அதிகமாகப் பணம் சம்பாதிப்பதோடு பணியாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு (Social Security) மற்றும் சட்டப் பாதுகாப்புகள் (Legal Protection) குறைவாக இருக்கலாம்.

4. உடல் ரீதியான பிரச்சினைகள்: நீண்ட நேர கணனிப் பாவனைகள், அதிகப்படியான வேலைகள், தொழில்நுட்பத்திலிருந்து விலகியிருக்க முடியாத நிலை (Always on Culture) ஆகியவை மன அழுத்தம், மற்றும் இன்னும் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கின்றது. 

தொழில் உலகத்தினை வெற்றி கொள்வதற்கான வழிகள் 

1. தேவையான கல்வித்தகுதிகள்: தொழில்களை அடையாளங்கண்டு அதனைப் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படைக் கல்வித் தகமைகளைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். உதாரணம்: O/L, A/L, டிப்ளமோ, அல்லது பட்டம், LLB, Edexcel, IB (சர்வதேச இளங்கலை பட்டம் - சுவிஸ்)

2. தொழில்முறைத் தகைமைகள்: அடையாளங் காணப்பட்ட தொழில்களுக்கான தேவையான தொழிற்பயிற்சிகள். உதாரணம்: தேசிய தொழிற்பயிசி தகைமைகள் (NVQ), நவீன தொழிநுட்பம் பற்றிய பயிற்சிகள் போன்றன 

3. தொழில்வாண்மைத் தகைமைகள்: அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை மற்றும் தொழில்வாண்மை அமைப்புகளால் வழங்கப்படும் தொழில்சார்ந்த அங்கீகாரங்கள் மற்றும் சான்றிதழ்கள். உதாரணம்: CIMA, ACCA, SLIM, CIM, HRM, Attorney-at Law etc)

4. மென் திறன்கள் விருத்தி: தற்போதைய நிலையில் சகல தொழில்களுக்கும் மற்றும் தொழிற் துறைகளுக்கும் மென் திறன்களின் முக்கியத்துவமானது பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு விடயமாக உள்ளது. இவற்றில், தொடர்பாடல் (Communication), தகவமைப்பு (Adaptability), விமர்சன சிந்தனை (Critical thinking), உணர்வு நுண்ணறிவு (Emotional Intelligence), ஒத்துழைப்பு (Collaboration), நேர முகாமைத்துவம் (Time Management), மீள்தன்மை (Resilience), தலைமைத்துவம் (Leadership), தொழில் நடத்தை (Work Behavior) - மனநிலையை மேம்படுத்தல் மற்றும் மீள் திறன் (re-skilling), திறன் மேம்பாடு (up-skilling) போன்றன...

5. டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தும் திறன்கள்: என்பது கணினியினை மட்டும் பயன்படுத்தும் திறன் என்பதோ செயலிகளைப் பயன்படுத்தும் திறன் என்பதோ பொருளல்ல மாறாக இது டிஜிட்டல் எழுத்தறிவு (Digital Literacy) என்று அழைக்கப்படுகின்றது. இது தற்போதைய டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட உலகில் பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகவும் , பொறுப்புணர்வுடனும் வாழ கற்றுக்கொள்ள, மற்றும் பணியாற்ற தேவையான அறிவு, திறன்கள், மற்றும் மனப்பான்மை பற்றிப் பேசும் ஒரு பெரிய தொகுப்பாகும். உதாரணம்: கணினிப் பயன்பாடு, இணையம், அடிப்படை மென்பொருள் பாவனைகள், செயற்கை நுண்ணறிவு, சமூக ஊடகங்கள், மின்னஞ்சல் தொடர்புகள் போன்றன....

6. ஆங்கிலம் மற்றும் மொழித் திறன்கள்: இன்றைய நவீன உலகில் இந்த மொழியறிவு மற்றும் ஆங்கில மொழி என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. குறிப்பாக இந்த ஆங்கில மொழியறிவு என்பது இன்றைய தொழில் உலகில் ஒரு பிரதான இணைப்பு மொழியாய செயற்படுகின்றது எனபது உண்மை. அதி ஆங்கிலம் வாசித்தல், பேசுதல், எழுதுதல், போன்றனவும், மின்னஞ்சல்கள் எழுதுவது , அறிக்கைகள் தயாரிப்பது, நேர்காணல்களில் பங்கேற்பது, IELTS, TOFFLE போன்றன 

7. அனுபவங்கள்: தெரிவுசெய்யப்படும் தொழிலுக்கு தேவையான போதுமான பயிற்சி மற்றும் அனுபவங்கள் இருப்பது சிறப்பானது.

8. உடல் தோற்றம் / சுகாதார நிலை- சுத்தமான மற்றும் தொழில்முறை தோற்றம், உடல் தகுதி (வேலைக்குத் தேவைப்பட்டால் மட்டுமே).

9. தொழில் தேடலுக்கு ஏதுவான கருவிகள் மற்றும் ஆவணங்கள்: தனிப்பட்ட தகுதிக்குறிப்புக்கள், சுயவிபரக் கோவை, LinkedIn, நேர்காணல் முன்னேற்பாடுகள், தரவுத் தளங்கள் பாவனை, தொழில் வெளியீட்டு மூலங்கள் போன்றன.

10. வலையமைப்பு (Networking): எமது தெரிவுசெய்யப்பட்ட தொழில் ரீதியான நிபுணர்கள், ஏற்கனவே அவ்வகை தொழில்களில் ஈடுபடுபவர்கள், துறைசார் வல்லுநர்கள் போன்றவர்களுடன் தொடர்பில் இருப்பது புதிய பல தொழில் வாய்ப்புக்களைப் பெற உதவும். 

தொழில் உலகம் என்பது மிகவும் சவாலான ஆனால் ஒரு அற்புதமான ஒரு விடயம். நாம் வாழும் இந் நவீன உலகில், இவ்வகை மாற்றங்களை ஏற்றுக்கொள்வதும், தொடர்ச்சியாகக் கற்றுக்கொள்வதும் எம்மை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்லும் என்பது உண்மை. புதிய வாய்ப்புக்களுக்கு ஏற்ப கற்றுக்கொண்டு அவ்வாய்ப்புக்களை பற்றிப் பிடித்துக்கொள்வதும் சவால்களை வெற்றி கொள்வதன் மூலம் எமது தொழில் வாழ்கையை மேலும் அர்த்தமுள்ளதாகவும், வெற்றிகரமானதாகவும் மாற்றிக்கொள்ள முடியும். 

உங்கள் தொழில் வாழ்க்கை அனுபவம் எவ்வாறு இருக்கின்றது? கீழே கம்மேன்ட்சில் பகிருங்கள். 



--------------------------------------------------------------------------------------------------

JOIN WITH US FOR CAREER GUIDANCE SERVICES AND VACANCIES UPDATES

💼 Focus Areas: Career Guidance | Career Counseling | Business Counseling | Business Motivation

📧 Email: vocatiovista@gmail.com

📞 Phone: +94 77 585 8636

🔗 Follow Us on our Social Media: 

📨 WhatsApp  🌍 Website  📘 Facebook  📸 Instagram  🎥 TikTok  ▶️ YouTube

Comments

Popular posts from this blog

Apply Now: TVEC Vacancies - 2025 | பதவி வெற்றிடங்கள் - மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு

Apply Now: Open Competitive Examination for Recruitment to Grade III of Management Service Officers (MSO) – 2024/2025

Posts of Driver and Conductor - Sri Lanka Transport Board (SLTB) | சாரதி மற்றும் நடத்துநர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பம்

FOLLOW ME ON SOCIAL MEDIA