🚀 வெற்றிக்கு வழி: தொழில் முயற்சியாண்மை தேர்ச்சிகள் (PEC) என்றால் என்ன?

தொழில் முயற்சியான்மைத் தேர்ச்சிகள் (Personal Entrepreneurship Competencies - PEC) என்றால் என்ன? 

ஒரு வியாபாரத்தை அல்லது வணிகச் செயற்பாட்டைத் தொடங்குவதென்பது மிகவும் உற்சாகமான மற்றும் ஆர்வமுள்ள ஒரு விடயமாக இருக்கின்றது. இருந்தபோதிலும் எல்லோராலும் தங்கள் வாழ்க்கையில் இவ்வாறனதொரு அத்தியாயத்தை இலகுவாகத் தொடங்க முடியாது. அவ்வாறே இலகுவாக ஒரு வியாபரத்தைத் தொடங்கி வெற்றிகரமான ஒரு வியாபாரியாகவும் ஆகிவிடவும் முடியாது. அதனால் தான் ஒரு வியாபரத்தை தொடங்குவது மற்றும் ஒரு வெற்றிகரமான வியாபாரியாக மாறுவது என்பது ஒரு சிறந்த மற்றும் நாம் வாழ்க்கையில் எடுக்கின்ற Risk - Taking விடயமாக இருக்கின்றது. 

இங்கு ஒரு சிறந்த வியாபாரி அல்லது ஒரு தொழில் முயற்சியாளரானவர் தனது வெற்றிக்கு அத்தியாவசியமான சில தனிப்பட்ட குணங்கள், திறன்கள் மற்றும் மனப்பான்மை என்பன தேவைப்படுகின்றன. இவற்றினையே நாம் "தொழில் முயற்சியாண்மை தேர்ச்சிகள்" (Personal Entrepreneurial Competencies - PEC) என்று அழைக்கின்றோம். இத்தேர்ச்சிகள் என்பது ஒரு தொழில்முயற்சியாளர் தங்கள் இலக்குகளை வெற்றிகரமாக அடைந்து கொள்ளவும் சிறப்பாக தங்கள் வியாபாரத்தில் ஈடுபடவும் உதவுவதுடன் ஒவ்வொருவரும் இதில் காணப்படும் ஒன்றோ அல்லது பல சிறப்பபுத் தேர்ச்சிகளைக் கொண்டிருப்பவர்களாக இருக்கின்றனர்.

1. வாய்ப்புத் தேடல் (Seeking Opportunities): 

"வாய்ப்பு" என்பது 'நமது முன்னேற்றத்திற்கான ஒரு நேர்மறைச் சந்தர்ப்பமாகும். இதில் வாய்ப்புக்கள் என்பது வெளியகச் சூழலிலிருந்து வருகின்ற ஒரு விடயமாகும். எந்த நபருக்கும் தமது செயற்பாடுகளை அபிவிருத்தி செய்வதற்கும் சிறப்பான வாழ்க்கையை மேற்கொள்வதற்குமான பல வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. வாய்ப்பைத் தேடிக்கொள்பவர் தனது வளர்ச்சிக்காக தற்போது காணப்படும் மற்றும் சாத்தியமான வாய்ப்புக்களை அடையாளங் காணுவதில் தகுதி கொண்டவராக இருப்பார். வாய்ப்புக்களை தமது வளர்சிக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு தனிப்பட்ட அர்ப்பணிப்பும் இன்றியமையாததாகும். 

2. விடாமுயற்சி (Persistence):

'விடாமுயற்சி' என்பது 'நாம் எதிர்பார்த்த பெறுபேற்றைப் பெற்றுக்கொள்ளும் வரை மீண்டும் மீண்டும் முயற்சி செய்தல்' என எளிமையாக வரையறுக்கலாம். உண்மையான ஒரு முயற்சியாளர் எந்தக் கஷ்டமான நிலைமையிலும் முயற்சியைக் கைவிடமாட்டார். உதாரணமாக தாமஸ் அல்வா எடிசன் மின்குமிழைக் கண்டுபிடிக்க 999  தடவைகள் தோல்வியடைந்தார். ஒவ்வொரு முறையும் தோல்வியடையும் போதும் அது தான் வெற்றியடைவதற்கான இன்னுமொரு வாய்ப்பு என்று கூறி வந்தார். அதன்படி அவர் 1000 தடவையில் தான் நினைத்த அந்த மின்குமிழை கண்டுபிடித்தார். 

3. ஒப்பந்தம் மற்றும் இலக்குகளுடன் கூடிய தொழிலுக்கான அர்ப்பணிப்பு (Commitment to work on contracts and targets):

ஒரு முயற்சியாளர் தனது இலக்குகளை அடைந்துகொல்வதில் உயர் அர்பணிப்புடன் இருக்கவேண்டியது அவசியாமாகும். எப்பொழுதும் சொந்த விடயங்களை விட ஒதுக்கப்பட்ட பணிகளுக்கே முன்னுரிமை வழங்கக் கூடியவராக இருப்பார். பெரும்பாலான முயற்சியாளர்கள் தங்களது வாடிக்கையாளர்களுடன், விசேடமாக நிறுவன வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரிவர். பொருத்தமான தரத்துடன் நேரத்திற்கு அவர் தங்கள் வாடிக்கையாளர்களின் வேண்டுதல்களை சரியாக வழங்கவில்லையாயின் குறித்த வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆர்வங்களை இழக்கக்கூடியவர்களாக இருப்பார்.

4. தரம், புத்தாக்கம் மற்றும் படைப்புத்திறன் (Quality, Innovation and Creativity): 

தொழில் முயற்சியாளர்கள் தங்கள் தொழிலின் தரத்தில் அர்ப்பணிப்புடையவர்களாக இருப்பதுடன் நிபுணத்துவம் கொண்டவர்களாகவும் தொழிலின் தரத்தினூடாக தங்களது செயற்பாடுகளை மேம்படுத்தக்கூடியவர்கலாகவும் இருப்பார். தரமான பொருட்கள் மற்றும் சேவைகளினூடாக வியாபாரிகள் தங்களது சந்த்தைப்பங்குகளை அதிகரித்துக் கொள்வதுடன் புத்தாக்கத்தினூடாக போட்டித்தன்மையும் அதிகரிக்கப்படலாம். புத்தாக்கம் என்பது தற்போது காணப்படும் பொருள், சேவை அல்லது செயற்பாடுகளை ஒரு சிறந்த பெறுபேற்றுக்காக மேம்படுத்துவதனைக் குறிக்கும். படைப்புத்திறன் என்பது முயற்சியாளர்களுக்கு தமது போட்டித்தன்மையை அதிகரித்துக் கொள்வதற்கு ஒரு முக்கிய காரணியாகவும் அமையும். 

5. தொழிற்றுணிவு எடுத்தல் (Risk Taking):

தொழிற்றுணிவு என்பது தோல்விக்கான ஒரு சந்தர்ப்பமாகும். ஒரு முயற்சியாளர் ஆபத்தான தீர்மானங்களை எடுத்து தனது தொழிலினைச் செய்ய விருப்பமுள்ளவராக இருக்கவேண்டும். ஆபத்துக்கும் தொழிலில் கிடைக்கும் நன்மைக்கும் ஒரு தொடர்புள்ளது. உயர் ஆபத்து - உயர் திரும்பல். குறைந்த ஆபத்து - குறைந்த திரும்பல். அரச உத்தியோகத்தை நாடுவோர் தொழிற்றுணிவு எடுக்காதவர்கள். தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிவதும் ஓரளவுக்கு ஆபத்தைக்கொண்டது. சொந்தமான ஒரு வியாபரத்தை ஆரம்பிப்பது மற்றும் அதனைக் கொண்டு நடாத்துவது என்பது ஒரு உயர் ஆபத்தைக் கொண்டதாகும்.  

6. இலக்கு நிர்ணயம் செய்தலும் முறையான திட்டமிடலும் (Goal Setting and Systematic Planning):  

உண்மையான ஒரு தொழில் முயற்சியாளர் எப்பொழுதும் இலக்குகளை நிர்ணயிப்பதுடன், குறித்த கால வரம்புக்குள் இலக்குகளை அடைவதற்கான திட்டங்களையும் வகுப்பார். இலக்குகள் இல்லாமல் ஒரு முயற்சியாளரால் வெற்றிபெற முடியாது. நீண்டகால இலக்குளை அடைந்து உயர் பெறுபேறுகளைப் பெறுவதற்காக குறுகியகால, இடைக்கால மற்றும் நீண்டகால இலக்குகள் என அமைத்து இயங்குதல் கூடுதல் வெற்றி வாய்ப்புக்களை வழங்கக் கூடியதாக இருக்கும். 

7. செல்வாக்கு செலுத்துதலும் (வசப்படுத்தல்) தொடர்பு வலையமைப்பும் (Persuasion and Networking):

ஒரு முயற்சியாளர் தனது இலக்குகளை அடைந்துகொள்வதற்கான ஆதரவைப் பெறுவதற்காக ஏனையோரை வசப்படுத்தலுக்கு உட்படுத்தக் கூடியதான ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும். முயற்சியாளர்கள் பல்வேறு வகையான நபர்களுடனும் நிறுவனங்களுடனும் தொடர்பு வலையமைப்பினைக் கொண்டிருப்பதுடன் அந்த வலையமைப்பு சிறப்பாகச் செயற்படுவதற்கும் தொழிலை விருத்தி செய்வதற்கும் இவ்வகையான சிறந்த வசப்படுத்தல் மற்றும் வலையமைப்பு இன்றியமையாததாக இருக்கும். வியாபாரிகள் தங்களது பொருட்கள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கு எப்பொழுதும் சிறந்த வலையமைப்புக்களை பயன்படுத்துவது சிறந்தது. வர்த்தக சம்மேளனங்கள், வியாபர அமைப்புக்கள் போன்ற வியபரிகளுக்கிடையிலான வலையமைப்புக்களை உருவாக்குவது அனைவருக்கும் நன்மையான விடயமாக இருக்கும். 

8. தன்னம்பிக்கை (Self Confidence):  

தொழில் முயற்சியாளர்கள் தங்களுக்காக உருவாக்கிய இலக்குகளை அடைவதற்கான தங்களது ஆற்றல் குறித்து தனக்கிடையே நம்பிக்கை கொண்டவர்களாக இருக்க வேண்டும். பெரும்பாலானவர்கள் தமக்குத் தெரிந்தவற்றையும் இலகுவாகச் செய்யக் கூடியவற்றையும் மட்டுமே செய்ய விரும்புவர். தெரியாத, பழக்கமில்லாத ஒரு விடயம் இருக்குமானால் அவர்கள் அதனை நேர்மறையாகச் சிந்திப்பதுடன் அதைச் செய்து முடிப்பதற்கான நம்பிக்கையையும் கொண்டிருத்தல் வேண்டும். 

யாரையாவது 3 பந்துகளை இரண்டு கைகளால் மாறிமாறித் தூக்கிப்பிடிக்க வேண்டும் எனக் கேட்கப்பட்டால் அவர்கள் 'இல்லை' 'இயலாது; எனவே கூறுவார். 

அதைச் செய்யக்கூடிய தன்னம்பிக்கை உள்ளவர்கள் அதை முயற்சிப்பதுடன், செய்வதற்கான உழைப்பையும் வழங்குவர். யாரேனும் இதைச் செய்யலாம், அனால் அதைச் செய்வதற்கு தன்னம்பிக்கை இருக்கவேண்டும். 

தொழில் முயற்சியாண்மை தேர்ச்சிகள் (PEC) என்பது பிறப்பிலேயே வருபவை அல்ல; அவை கற்றுக்கொள்ளக்கூடியவை, வளர்க்கப்படக்கூடியவை. ஒரு தொழில்முனைவோர் தனது வணிகப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன், இந்தத் தேர்ச்சிகளில் தான் எங்கு நிற்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதும், பலவீனமான பகுதிகளில் கவனம் செலுத்துவதும் வெற்றிக்கான மிக முக்கியமான முதல் படியாகும்.


--------------------------------------------------------------------------------------------------

JOIN WITH US FOR CAREER GUIDANCE SERVICES AND VACANCIES UPDATES

💼 Focus Areas: Career Guidance | Career Counseling | Business Counseling | Business Motivation

📧 Email: vocatiovista@gmail.com

📞 Phone: +94 77 585 8636

🔗 Follow Us on our Social Media: 

📨 WhatsApp  🌍 Website  📘 Facebook  📸 Instagram  🎥 TikTok  ▶️ YouTube

Comments

Popular posts from this blog

Apply Now: TVEC Vacancies - 2025 | பதவி வெற்றிடங்கள் - மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு

Posts of Driver and Conductor - Sri Lanka Transport Board (SLTB) | சாரதி மற்றும் நடத்துநர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பம்

மாணவர்களின் கல்வித்திறன் விருத்தி: டிஜிட்டல் டிடாக்ஸ் (Digital Detox) மற்றும் நேர முகாமைத்துவம்.

FOLLOW ME ON SOCIAL MEDIA