Benjamin Bloom’s Taxonomy Explained: 6 Levels of Learning | Educational Psychology | பெஞ்சமின் ப்ளூமின் (Bloom’s) கற்றல் வகைப்பாட்டியல்

பெஞ்சமின் ப்ளூமின் (Bloom’s) கற்றல் வகைப்பாட்டியல் 

உண்மையில் நாம் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ளும் விடயங்களை வெறுமனே நினைவில் வைப்பதிலிருந்து, அந்த விடயங்களைப் பயன்படுத்தி எவ்வாறு புதிய ஒன்றை உருவாக்கி முன்னேறுகின்றோம் என்பதை விளக்கும் மற்றும் புரிதலை வழங்கும் ஒரு மிக்கியாமன் கல்விக் கட்டமைப்பைத்தான் இந்த ப்ளுமின் கற்றல் வகைப்பாட்டியல் விளக்குகின்றது.🌱

கல்வியியலாளர் பெஞ்சமின் ப்ளூம் மற்றும் அவரது சக ஆய்வாளர்கள் இணைந்து உருவாக்கிய இந்தக் கட்டமைப்பு, அடிப்படை அறிவிலிருந்து ஆழமான சிந்தனை மற்றும் படைப்பாற்றல் வரை கற்றல் எவ்வாறு வளர்ச்சியடைகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இந்த ஆய்வின் மூலம் அவர்கள் கற்றலை பின்வரும் 6 நிலைகள் ஊடாக விளக்குகின்றனர்.

📚 கற்றலின் 6 நிலைகள்:

  1. நினைவுகூருதல் (Remember) – நாம் கருக்கொள்கின்ற தகவல்களையும் விடயங்களையும் நேரத்திற்கேற்ப தேவையான நேரங்களில் இடங்களில் அவற்றை நினைவுகூருவதை இது விளக்குகின்றது. 

  2. புரிந்துகொள்ளுதல் (Understand) – கற்றுக்கொண்ட விடயங்களை ஆழமாக உள்வாங்கி அவற்றின் உண்மைத் தன்மைகள், கருத்துக்கள் மற்றும் சொல்லவரும் விடயங்களைத் தமது சொந்த வார்த்தைகளில் விளக்குதல். 

  3. பயன்படுத்துதல் (Apply) – கற்றுக்கொண்ட மற்றும் நாம் பெற்ற அறிவினை தபோதைய நடைமுறைச் சூழல்களுக்கேற்ப  அவற்றுக்குப் பொருந்தும் வகையில் உரிய விடயங்களுக்குப் பயன்படுத்துதல். 

  4. பகுப்பாய்வு செய்தல் (Analyze) – கற்றுக்கொண்ட கருத்துகளை மற்றும் விடயங்களை அலசி ஆராய்ந்து அவற்றுக்கிடையிலான தொடர்புகள், உண்மைத் தன்மைகள், மற்றும் உள்ளடக்கங்களை பகுப்பாய்வு செய்து கண்டறிதல். 

  5. மதிப்பீடு செய்தல் (Evaluate) – கருத்துக்களை அலசி ஆராய்ந்த பின் அவற்றின் ஆதாரங்கள், கருத்துக்கள் மற்றும் காரணங்களின் அடிப்படையில் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளுதல். 

  6. உருவாக்குதல் (Create) – கற்றுக்கொண்ட அறிவினைப்  பயன்படுத்தி புதிய கருத்துகள், தீர்வுகள் அல்லது படைப்புகளை அவற்றினூடாக உருவாக்குதல். 

சிறந்த கற்றல் என்பது தகவல்களை மனப்பாடம் செய்வது மட்டுமல்ல! அது சொல்கின்ற கருத்துகளைப் புரிந்துகொள்வது, அதனைக்கொண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, விமர்சன ரீதியாகச் சிந்திப்பது, கற்ற அறிவைச் செயல்பாட்டில் பயன்படுத்துவது ஆகியவையும் கற்றலின் முக்கியமான பகுதிகளாகும்.

நீங்கள் மாணவராகவோ, ஆசிரியராகவோ, பயிற்றுவிப்பாளராகவோ அல்லது வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்பவராகவோ இருந்தாலும், ப்ளூமின் இந்த கற்றல் வகைப்பாட்டியல் உங்கள் கற்றலை மேலும் அர்த்தமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற உதவும்.

தொடர்ந்து கற்போம்! வளர்வோம்! புதியன படைப்போம்!

மேலும் கல்வி உளவியல், கற்றல் உத்திகள் மற்றும் தொழில் வழிகாட்டல் தொடர்பான பயனுள்ள தகவல்களுக்கு VocatioVista – உங்கள் தொழில் தெளிவுக்கான வழிகாட்டி பக்கத்தைப் பின்தொடருங்கள்!


-----------------------------------------------------------------------------------------------------------------------------

💼 Focus Areas: Career Guidance | Career Counseling | Business Counseling | Business Motivation

📧 Email: vocatiovista@gmail.com

📞 Phone: +94 77 585 8636

🔗 Follow Us on our Social Media: 
📨 WhatsApp  🌍 Website  📘 Facebook  📸 Instagram  🎥 TikTok  ▶️ YouTube

---------------------------------------------------------------------------------------------

Comments

Popular posts from this blog

மாணவர்களின் கல்வித்திறன் விருத்தி: டிஜிட்டல் டிடாக்ஸ் (Digital Detox) மற்றும் நேர முகாமைத்துவம்.

Grama Niladhari Exam Application 2025 (GS Exam) – Application, Eligibility & Syllabus | கிராம நிலதாரி (GS) போட்டிப் பரீட்சை 2025 – விண்ணப்பம், தகுதி, பாடத்திட்டம்

🎓 சாதாரண தர (O/L) பரீட்சை முடிந்துவிட்டதா? அடுத்து என்ன செய்வது? How to Choose the Right A/L Stream in Sri Lanka After O/L Exams (2026 Guide)

FOLLOW ME ON SOCIAL MEDIA