SWOT பகுப்பாய்வு - SWOT Analysis


SWOT பகுப்பாய்வு என்பது ஒரு நிறுவனத்தின், திட்டத்தின் அல்லது தனிநபரின் பலங்கள் (Strengths), பலவீனங்கள் (Weaknesses), வாய்ப்புகள் (Opportunities) மற்றும் அச்சுறுத்தல்கள் (Threats) ஆகியவற்றை அடையாளம் காணப் பயன்படுத்தப்படும் ஒரு மூலோபாய திட்டமிடல் நுட்பமாகும். இது அந்நிறுவனத்தின் அல்லது திட்டங்களின் விரிவான பார்வையை வழங்குவதுடன் திட்டங்களை வகுக்கும் போது தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது.

இப்பகுப்பாய்வின் ஒவ்வொரு கூறுகளையும் பற்றி விரிவாகப் பார்ப்போம்:

  • S - பலங்கள் (Strengths): இவை உள்புறக் (internal) காரணிகளாகும். ஒரு நபரின், நிறுவனத்தின் அல்லது திட்டத்தின் உள் திறன்கள், நல்ல அம்சங்கள், போட்டியில் முன்னிலை கொடுக்கும் சக்திகள் போன்றவற்றைக் கொண்டிருக்கும். அவை ஒரு நன்மைக்காகப் பயன்படுத்தப்படுவதுடன் போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுத்தி, வெற்றியை அடைய உதவும் நேர்மறையான அம்சங்களைக் கொண்டதாகவும் அமைகின்றது.

    • உதாரணங்கள்: நீங்கள் விரைவாகக் கற்றுக் கொள்பவர், உங்கள் நிறுவனத்திற்கு வலுவான பிராண்ட் நற்பெயர், அனுபவம் வாய்ந்த ஊழியர்கள், புதுமையான தொழில்நுட்பம், திறமையான செயல்முறைகள், வலுவான நிதிநிலை. 
    • சந்தேகிக்க வேண்டிய கேள்விகள்:

      • என்ன என்ன வேலைகளில் நான் சிறப்பாக இருக்கிறேன்?

      • என்னுடைய வலிமை என்ன?

  • W - பலவீனங்கள் (Weaknesses): இவை ஒரு நிறுவனத்தின் அல்லது திட்டத்தின் உள் பண்புகள் ஆகும், அவை உங்களுக்கு அல்லது உங்கள் நிறுவனத்திற்கு உள்ள குறைபாடுகள், மேம்படுத்தப்பட வேண்டிய பகுதிளாக இருக்கலாம்.  அது மட்டுமல்லாது உங்கள்இலக்குகளை அடைவதைத் தடுக்கும் எதிர்மறையானஅம்சங்களாகவும் இருக்கலாம். 

    • உதாரணங்கள்: குறைந்த சந்தைப் பங்கு, அனுபவமற்ற ஊழியர்கள், நேர முகாமைத்துவக் குறைபாடு, போதிய நிதி இல்லை, பழைய தொழில்நுட்பம், திறமையற்ற செயல்பாடுகள், மோசமான வாடிக்கையாளர் சேவை.
    • சந்தேகிக்க வேண்டிய கேள்விகள்:

      • என்ன என்ன விஷயங்களில் நான் குறைவாக இருக்கிறேன்?

      • என்னுடைய திறமையின் பின்புறம் எது?

  • O - வாய்ப்புகள் (Opportunities): இவை வெளிப்புற காரணிகள் ஆகும், அவை ஒரு நபரிற்கு, நிறுவனத்திற்கு அல்லது திட்டத்திற்கு சாதகமான வெளி சூழ்நிலையில் இருந்து கிடைக்கும் முன்னேற்ற வாய்ப்புகள்.

    • உதாரணங்கள்: புதிய சந்தைகள், வளரும் தொழில்நுட்பங்கள், சாதகமான அரசாங்க கொள்கைகள், அதிகரித்த வாடிக்கையாளர் தேவை, போட்டி பலவீனம்.
    • சந்தேகிக்க வேண்டிய கேள்வி:

      • என்ன வாய்ப்புகளை நான் பயன்படுத்திக்கொள்ள முடியும்?

      • என்னுடைய வளர்ச்சிக்குப் புது வாய்ப்புகள் என்ன?

  • T - அச்சுறுத்தல்கள் (Threats): இவை வெளிப்புற காரணிகள் ஆகும், அவை ஒரு நபரிற்கு, நிறுவனத்திற்கு அல்லது திட்டத்திற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் காரியங்கள். 

    • உதாரணங்கள்: புதிய போட்டியாளர்கள், பொருளாதார மந்தநிலை, மாறிவரும் வாடிக்கையாளர் விருப்பங்கள், தொழில்நுட்ப மாற்றங்கள், சட்ட அல்லது ஒழுங்குமுறை மாற்றங்கள்.

SWOT பகுப்பாய்வின் நோக்கம் மற்றும் பயன்கள்:

  • மூலோபாய திட்டமிடல்: ஒரு நிறுவனம் அதன் பலங்களைப் பயன்படுத்தி வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்தலாம், பலவீனங்களை எவ்வாறு சமாளிக்கலாம் மற்றும் அச்சுறுத்தல்களை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
  • முடிவெடுத்தல்: எதிர்காலம், மற்றும் வணிக முடிவுகளை எடுக்கும் போது, ஆபத்துகள் மற்றும் வெகுமதிகளை அடையாளம் காண உதவுகிறது.
  • வளர்ச்சி மற்றும் மேம்பாடு: மேம்படுத்தப்பட வேண்டிய பகுதிகளை அடையாளம் கண்டு, புதிய உத்திகளை உருவாக்க தூண்டுகிறது.
  • போட்டித்தன்மை: போட்டியாளர்களை விட ஒரு நிறுவனம் எங்கு நிற்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
  • ஆபத்து முகாமைத்துவம்: சாத்தியமான அச்சுறுத்தல்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு, அவற்றை எதிர்கொள்ள திட்டமிட உதவுகிறது.

சுருக்கமாக, SWOT பகுப்பாய்வு என்பது ஒரு நிறுவனத்தின் உள் மற்றும் வெளிப்புற சூழலைப் பற்றிய ஒரு முழுமையான பார்வையை வழங்குகிறது, இது தகவலறிந்த மூலோபாய முடிவுகளை எடுக்க இன்றியமையாத கருவியாகும்.


Comments

Popular posts from this blog

மாணவர்களின் கல்வித்திறன் விருத்தி: டிஜிட்டல் டிடாக்ஸ் (Digital Detox) மற்றும் நேர முகாமைத்துவம்.

The Secret to Speaking: உங்கள் பேச்சால் மற்றவர்களைக் கவர வேண்டுமா? பேசும் போது தடுமாறுகின்றீர்களா?

Grama Niladhari Exam Application 2025 (GS Exam) – Application, Eligibility & Syllabus | கிராம நிலதாரி (GS) போட்டிப் பரீட்சை 2025 – விண்ணப்பம், தகுதி, பாடத்திட்டம்

FOLLOW ME ON SOCIAL MEDIA