தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி? Building Self-Confidence: Your Path to Inner Strength
தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி? Building Self-Confidence:
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறவும், சவால்களை எதிர்கொள்ளவும், வாழ்கையில் கடினமான நிலைகளின் போதும், தன்னம்பிக்கை என்பது மிக அவசியமான ஒரு விடயமாக இருக்கின்றது. ஆனால், நம்மில் பலர் தன்னம்பிக்கை குறைவாக இருப்பதனாலும், ஒரு விடயம் பற்றி அதிகமாக நடக்காத விடயங்கள் பற்றி சிந்திப்பதனாலும் பல நேரங்களில் பல வாய்ப்புகளைத் தவறவிடுகிறோம். தன்னம்பிக்கை என்பது திடீரென வந்துவிடும் ஒரு விஷயம் அல்ல; மாறாக அது படிப்படியாக நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு குணம். இந்தக் கட்டுரை முழுமையாக வாசிப்பதன் மூலம் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதற்கான சில வழிமுறைகளை உங்களுக்கு வழங்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
1. தன்னம்பிக்கை என்றால் என்ன - What is Self-Confidence?
தன்னம்பிக்கை என்பது உங்களது திறன்கள், குணங்கள் மற்றும் முடிவுகள் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையாகும். நீங்கள் செய்யும் காரியங்களில், அல்லது எடுக்கின்ற முடிவுகளில் வெற்றி பெறுவீர்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கைதான் தன்னம்பிக்கை. இது, நீங்கள் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளவும், தோல்விகளில் இருந்து மீண்டு வரவும், வீணான அதீத சிந்தனைகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
2. தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான வழிகள் - Ways to Build Self-Confidence:
- சிறு வெற்றிகளைக் கொண்டாடுங்கள் - celebrate small wins: பெரிய இலக்குகளை அடைவதற்கு முன் அல்லது பெரிய வெற்றிகளைக் கொண்ட்டாட முன், சிறிய வெற்றிகளைக் கொண்டாடுவது முக்கியம். ஒரு கடினமான வேலையை முடித்தீர்களா? புதிய விஷயம் ஒன்றைக் கற்றுக்கொண்டீர்களா? உங்களின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு ஒன்றைஅடைந்து விட்டீர்களா? அதைப் பாராட்டி உங்களை நீங்களே ஊக்குவியுங்கள். இந்தச் சிறிய வெற்றிகள் உங்களை மேலும் ஊக்கப்படுத்தும்.
நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள் - cultivate positive self-talk: நமது மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்கள்தான் தன்னம்பிக்கையைக் குறைக்கின்ற மிக முக்கிய காரணியாக இருக்கின்றது. "என்னால் முடியாது," "நான் இதற்குத் தகுதியற்றவன்" போன்ற எண்ணங்களை மாற்றி, "என்னால் முடியும்," "நான் இதைச் செய்து முடிப்பேன்" போன்ற நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இவ்வகையான நேர்மறை எண்ணங்கள் உங்கள் உள்ளங்களில் மாற்றத்தினை ஏற்படுத்தி தன்னம்பிக்கையை உங்களுக்குள் வளர்க்கும்.
சௌகரியமான சூழ்நிலையை விட்டு வெளியே வாருங்கள் - step outside your comfort zone: வளர்ச்சி என்பது நாம் சௌகரியமாக அல்லது சொகுசாக உணரும் ஒரு வட்டத்திற்குள் நிகழ்வது அல்ல மாறாக உங்கள் சொகுசு வட்டத்திற்கு வெளியேயும் நீங்கள் சற்று முயற்சித்து பார்க்கவேண்டும். அதற்காக நீங்கள் சௌகரியமாக அல்லது சொகுசாக உணராத சிறிய விஷயங்களைச் செய்து பாருங்கள். உதாரணமாக, புதிய நபர்களுடன் பேசுவது, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது, புத்தி விடயங்களை கண்டுபிடிக்க முயற்சிப்பது போன்ற விடயங்களில் நீங்கள் முயலும் போதும் நீங்கள் புதிய சூழல்களில் வெற்றி பெறும்போது, உங்கள் தன்னம்பிக்கை தானாகவே அதிகரிக்கும்.
புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள் - learn new things: அறிவு என்பது ஒரு சக்தி வாய்ந்த கருவி. புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது, புத்தகங்களைப் படிப்பது, அல்லது புதிய தகவல்களைத் தெரிந்துகொள்வது போன்றவை உங்கள் திறமையை மேம்படுத்தும். நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கற்றுக்கொள்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் திறமையானவராக உணர்வீர்கள், இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
உங்கள் பலங்களில் கவனம் செலுத்துங்கள் - focus on your strengths: நமது பலவீனங்களை மட்டும் பார்ப்பதை நிறுத்திவிட்டு, உங்களது பலங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் தனித்திறமைகள், நல்ல குணங்கள், மற்றும் நீங்கள் சிறப்பாகச் செய்யும் விஷயங்கள் என்னென்ன என்று பட்டியலிடுங்கள். அவற்றை மேலும் மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கை வளரும்.
உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள் - take care of yourself: உடல் மற்றும் மன ஆரோக்கியம் தன்னம்பிக்கைக்கு மிக அவசியமான விடயங்கள். போதுமான தூக்கம், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். நீங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நன்றாக உணரும்போது, உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
தோல்விகளைக் கண்டு அஞ்சாதீர்கள் - don't fear failures: தோல்விகள் என்பவை கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளே தவிர, முடிவுகள் அல்ல. ஒருமுறை தவறிழைத்தால், அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு தோல்வியும் உங்களுக்கு ஒரு புதிய பாடத்தைக் கற்றுத்தரும்.
Comments
Post a Comment