Fiverr இணையத்தளம் மூலமாக வீட்டில் இருந்தவாறே பணம் சம்பாதிப்பது எப்படி?
முதலில் இந்த Fiverr என்றால்
என்ன?
இன்று நம்மில் பலர் சந்திக்கின்ற
பிரச்சினைகளில் ஒன்று தான் “நிரந்தர அல்லது ஒரு நிலையான வருமானம் பெறுகின்ற தொழில்”
என்பதாகும். குறிப்பாக,
தொழில்நுட்பங்களைக் கற்ற அதிகமான இளைஞர்கள், தூர இடங்களுக்குச் சென்று தொழில்
புரிய விரும்ம்பாத பெண்கள், வீடுகளிலிருந்தே சம்பாதிக்க நினைக்கும் தொழில்
தேடுனர்கள், அவர்களுக்குத் தொழில் ஒன்று தேவையாக இருந்தாலும், தொழில்
ஒன்று புரிய விரும்பினாலும் அதனை எவ்வாறு மேற்கொள்வது, எங்கிருந்து அதனைப்
பெற்றுக்கொள்வது, யாரினூடகப் பெற்றுகொள்வது எனத் தெரியாமல் வீடுகளிலே முடங்கி
இருக்கின்றனர். இங்கே தான் இப்படியான Fiverr போன்ற இணையதளங்கள் இவ்வாறு
வீடுகளிலிருந்தே சம்பாதிக்க நினைக்கும் ஊழியர்களுக்கு புதிய பல வாய்ப்புக்களை வழங்குகின்றன.
Fiverr என்பது இன்று உலகில் இருக்கின்ற பலராலும் பயன்படுத்தப் படுகின்ற ஒரு புகழ் பெற்ற ஒரு சுதந்திர ஊழியர் (freelancing) தளமாக இருக்கின்றது. இங்கு பல சுதந்திர ஊழியர்கள் தங்களது திறன்கள் ஆளுமைகள் அறிவுகளைக் கொண்டு தங்களால் வழங்கப்பட முடியுமான சேவைகளை (கிக் என்று அழைக்கப்படும் வியாபாரங்களை) தங்களது வீடுகளிலிருந்தே உலகம் முழுவதிலுமுள்ள வாடிக்கையாளர்களுடன் இணைந்து சம்பாதித்துக் கொண்டும் இருக்கின்றார்கள். இதில் பலர்,
- இலட்சினை (லோகோ) வடிமைப்பாளர்களாக
- மென்பொருள் வடிவைப்பளர்களாக,
- கட்டிடக் கைவினைஞர்களாக,
- எழுதுனர்களாக, மொழிபெயர்ப்பாளர்களாக,
- டிஜிட்டல் மார்க்கெட்டிங் உதவியியாலாளர்களாக,
- வீடியோ ஆடியோ உருவாக்குபவர்களாக,
என பல தரப்பட்ட தொழில்சார்
விடயங்களில் இணைந்து தங்களது வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் விருப்பங்களுக்கேற்ப
தங்களது சேவைகளை வழங்கி சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்தத் தொழில் முறையானது இணையவழியூடாக
மட்டுமே நடைபெறும். வாடிக்கையாளர் அவரது தேவைகளைத முன்வைப்பது முதல் இறுதி
நடவடிக்கைப் பணப் பரிமாற்றம் வரை இன்வையவழி ஊடாகவே நடைபெறும். இதற்கு ஒரு கணினி, இணைய
இணைப்பு மற்றும் நீங்கள் வழங்க இருக்கும் சேவைக்கான திறன்கள் இருந்தால் மட்டும்
போதுமானது.
இந்த Fiverr எவ்வாறு செல்யல்படுகின்றது?
- Fiverr (https://www.fiverr.com/pe/Gz5Lr00) எனும் இலவச இணையத்தளத்திற்குச் சென்று இலவச கணக்கொன்றைத் திறந்து கொள்ள வேண்டும்.
- உங்களுக்கு இருக்கும் திறமை திறன் அறிவு போன்றவற்றைக் கொண்டு ஒன்று அல்லது ஒன்றுக்கு மேட்பட்ட Gig களை உருவாக்க வேண்டும்.
- உங்கள் Gig களுக்கு ஏற்ப வாடிக்கையாளர்கள் உங்களைத் தொடர்பு கொண்டு தங்களுக்குத் தேவையான கட்டளைகளை (order) அனுப்புவார்கள்.
- நீங்கள் அந்தக் குறிப்பிட்ட அந்த வேலையை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் முடித்துக் கொடுக்க வேண்டும்.
- பின்னர் அந்த வேலைக்கான பணத்தை Fiverr உங்களுக்கு பரிமாற்றம் செய்யும்.
இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் பலர்
இந்தத் தொழில் முறையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இன்று பல இளைஞர்கள் மென்பொருள் நிபுணர்களாக, கிராபிக்
வடிவமைப்பளர்களாக, வீடியோ ஆடியோ எடிட்டர்களாக, டிஜிட்டல் மார்க்கடர்களாக Fiverr ஊடாக வீட்டிலிருந்து
கொண்டே வருமானம் ஈட்டி வருகின்றார்கள். சிலர் ஒருநாளைக்கு பத்தாயிரம் என்று
தொடங்கி ஒரு மாதத்திற்கு பல இலட்சம் ரூபாய்கள் என்று வருமானமாக ஈட்டி
வருகின்றார்கள். அரச தனியார் தொழில்களை விட இந்த இணையதள தொழில் முறைகள் மூலம் பலர்
சம்பாதித்து வருவது கண்கூடாகக் காணக்கூடியதாகவுள்ளது.
இதற்கு நீங்கள் முதலில்
- உங்களுக்கு வீடுகளிலிருந்தே பணம் சம்பாதிக்க வருமானம் ஈட்ட விருப்பாக உள்ளதா?
- உங்களிடம் இந்த இணையவழித் தொழிலினைத் தொடங்கப் போதுமான திறன்கள் திறமைகள் வளங்கள் உள்ளனவா?
- அந்தத் திறன்களை வளங்களை மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் இணையவளியூடாக சேவை வழங்க விரும்புகின்றீர்களா?
அப்படியென்றால், உடனே நீங்கள் Fiverr மற்றும்
அதனோடிணைந்த விடயங்கள் பற்றி ஆராயுங்கள். Fiverr போன்று இன்னும் Upwork, freelancer.com toptal போன்ற
பல இணையவழி சுதந்திர ஊழியர் (freelancing) இணையத்தளங்கள் உள்ளன என்பதனையும் ஆராய்ந்து
பாருங்கள். இன்றைய உங்களது சிறிய முயற்சி நாளை உங்களது வாழ்க்கையையே மாற்றக்கூடியதாக
இருக்கும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.
இது பற்றி மேலும் அறிந்துகொள்ள எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்.
--------------------------------------------------------------------------------------------------
JOIN WITH US FOR CAREER GUIDANCE SERVICES AND VACANCIES UPDATES
💼 Focus Areas: Career Guidance | Career Counseling | Business Counseling | Business Motivation
📧 Email: vocatiovista@gmail.com
📨 WhatsApp 🌍 Website 📘 Facebook 📸 Instagram 🎥 TikTok ▶️ YouTube
Comments
Post a Comment