NVQ Level 6 Equivalence to HNDQS and HNDE Programmes of SLIATE
NVQ level 6 equivalence to HNDQS and HNDE Programmes of SLIATE | SLIATE நிறுவனத்தின் HNDQS & HNDE பாடநெறிகளுக்கு NVQ-06 (VI) அங்கீகாரம்
இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் (SLIATE) பாடநெறிகளுக்கு தேசிய தொழிற்கல்வித் தகைமை - 06 (NVQ-VI) சான்றிதழை வழங்க மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு (TVEC) அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் நடாத்தும் இரண்டு உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிகளான கணிய அளவையியல் உயர் தேசிய டிப்ளோமா (HNDQS) மற்றும் ஆங்கிலத்தில் உயர் தேசிய டிப்ளோமா (HNDE) ஆகிய பாடநெறிகளுக்கு தேசிய தொழிற்கல்வித் தகைமை (NVQ-06) ற்கு சமமான தரச் சான்றிதழை வழங்க மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு (TVEC) அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2025 ஜூலை மாதம் 08 ஆந் திகதி நடைபெற்ற 2025/05/303 ஆம் இலக்க ஆணைக்குழு கூட்டத்தின் போது, மேற்படி இரண்டு கற்கைகளும் NVQ மட்டம் 06 தரநிலைகளுக்கு இணங்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கணிய கணிய அளவையியல் உயர் தேசிய டிப்ளோமா (HNDQS) மற்றும் ஆங்கிலத்தில் உயர் தேசிய டிப்ளோமா (HNDE) ஆகிய கற்கைநெறிகளை நிறைவு செய்கின்றவர்களுக்கு NVQ மட்டம் இற்கு சமமான சான்றிதழை வழங்குவதற்கு விண்ணப்பதாரர்கள் SLIATE பணிப்பாளர் நாயகம் / பணிப்பாளர் / அதிபர் ஆகியோரால் சான்றுப்படுத்தப்பட்ட இறுதிச் சான்றிதழின் பிரதியுடன் ரூபா 1,000.00 கட்டணத்துடன் தங்கள் கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம். இது தொடர்பான சுற்றறிக்கை 2025.07.09 ஆந் திகதி அன்று வெளியிடப்பட்டு அன்று முதல் நடைமுறைக்கு வருமென குறிப்பிடப்பட்டுள்ளது.
The Sri Lanka Institute of Technology (SLIATE) has granted accreditation to award NVQ-06 equivalent certificates for the Two Higher National Diploma courses namely Higher National Diploma in Quantity Surveying and Higher National Diploma in English.
--------------------------------------------------------------------------------------------------
JOIN WITH US FOR CAREER GUIDANCE SERVICES AND VACANCIES UPDATES
💼 Focus Areas: Career Guidance | Career Counseling | Business Counseling | Business Motivation
📧 Email: vocatiovista@gmail.com
📨 WhatsApp 🌍 Website 📘 Facebook 📸 Instagram 🎥 TikTok ▶️ YouTube



Comments
Post a Comment