10 முக்கியமான நேர்முகத் தேர்வின் போது சொல்லக் கூடாத, சொல்லவேண்டிய விடயங்கள் - 10 Important Ideas You Shouldn't Say and You Should Say in Job Interview

10 முக்கியமான நேர்முகத் தேர்வின் போது சொல்லக் கூடாத, சொல்லவேண்டிய விடயங்கள்  - 10 Important Ideas You Shouldn't Say and You Should Say in Job Interview


1. சொல்லக் கூடாதவை: இப்போது எந்தக் கேள்வியும் என்னிடம் இல்லை

ஏன்: இதன்மூலம் நீங்கள் அவ்வேலைக்கு தயாராகவும் ஆர்வமாகவும் இருப்பதைக் காட்ட இருக்கும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பை இழக்கின்றீர்கள்.

சொல்லுங்கள்: இந்தத் தொழிலில் முதல் மூன்று மாதங்களில் எனது வெற்றி என்பது எப்படி இருக்கும். 

2. சொல்லக் கூடாதவை: உங்களது நிறுவனத்தைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது

ஏன்: அது உங்களை இத்தொழிலுக்கு தயாராக இல்லாதவராகவும், ஆர்வமில்லாதவராகவும், மற்றும் அந்நிறுவனம் பற்றி ஆய்வு செய்ய விரும்பாதவராகவுமான ஒரு தோற்றத்தை வழங்கும்.

சொல்லுங்கள்: நான் உங்களது நிறுவனத்தைப் பற்றி ஆய்வு செய்து கற்றறிந்து கொண்டேன், மற்றும் உங்களது நிறுவனத்தின் முன்னேற்றங்களையும் கண்டு அகமகிழந்தேன் - மேலும் உங்களது நிறுவனத்தின் முன்னேற்றமும் விருத்தியும் எவ்வாறு சென்று கொண்டிருக்கின்றது என்பதைப் பற்றி சற்று கூறமுடியுமா?  

3. சொல்லக் கூடாதவை: எனக்கு உண்மையில் எந்த பலவீனங்களும் இல்லை

ஏன்: எல்லோருக்கும் பலவீனங்கள் இருக்கின்றன - இவ்வகையான பதில்கள் உங்களுக்கு உங்களைப் பற்றிய ஒரு சுய மதிப்பீடல் இல்லை என்பதைக் காட்டும்.

சொல்லுங்கள்: நான் குறித்த பதவியில் சிறந்து விளங்க கடுமையாக உழைத்து வருகின்றேன். எனது பலவீனங்கள் பற்றி சில முக்கியமான முடிவுகளை எடுத்த  பின்னர், நான் முன்னரை விட கணிசமாக விருத்தியடைந்துள்ளேன். 

4. சொல்லக் கூடாதவை: எனது முந்தைய தொழில் நிறுவனம் என்னைத் தொழிலிருந்து நீக்கியது.

ஏன்: உங்களைப் பணிநீக்கம் செய்தது நியாயமற்றதாக இருக்கலாம், ஆனால் பணிநீக்கம் செய்யப்படுவது உங்கள் மீதான ஒரு களங்கமாகப் பார்க்கப்படுகின்றது.

சொல்லுங்கள்: அந்நிறுவனத்தில் எனது தொழிலானது எதிர்பாராத விதமாக முடிந்துவிட்டது, ஆனால் இந்தக் குறிப்பிட்ட தொழிலில் நான் எனது திறமைகளை வளர்த்துக்கொள்ள உரிய நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டேன் மேலும் நான் கற்றுக்கொண்ட திறன்களை மீண்டும் பயன்படுத்த ஆர்வமாக உள்ளேன்.  


5. சொல்லக் கூடாதவை: எனக்கு இப்போது எந்த வேலையைக் கொடுத்தாலும் செய்வேன். 

ஏன்: உங்களுக்கு இந்தக் குறிப்பிட்ட வேலையில் உண்மையான ஆர்வமில்லை என்றும் நீங்கள் எந்த வேலைக்கும் ஆசைப்படுவர் போலவும் தோன்றும். 

சொல்லுங்கள்: இந்தப் பதவி எனது பலத்துடன் எவ்வாறு ஒத்துப்போகின்றது என்பதைப் பற்றி அறிந்துகொள்ள உற்சாகமாக இருக்கின்றேன்.   

6. சொல்லக் கூடாதவை: நான் ஒரு சிறந்த தொடர்பாடல்களைப் பேணும் நபர் இல்லை 

ஏன்: நீங்கள் உங்களது பலவீனங்களைக் எடுத்துக் கூறவேண்டும் என்றாலும் அந்தப் பலவீனங்களைப் பலமாக மாற்றுவதற்கான திட்டங்களைக் கூறாமல் அதனைச் செய்யக்கூடாது.  

சொல்லுங்கள்: தொடர்பாடல் என்பது தற்போது நான் அதிகமாக் கற்றுக்கொண்டிருக்கும் ஒரு விடயமாகும் - கனிணி மற்றும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைத் தற்போது நான் பயன்படுத்துவதோடு சில தொடர்பாடல் திறன்களை மேம்படுத்தும் பயிற்சிநெறிகளையும் கற்று வருகின்றேன்.    

7. சொல்லக் கூடாதவை: எனக்கு தொழில்முறை வாழ்க்கை இலக்குகளோ ஐந்து வருட திட்டங்களோ எதுவுமில்லை. 

ஏன்: உங்களுக்கு இந்தக் கேள்வி பிடிக்கவில்லை என்றாலும், கற்றல் மற்றும் வளர்ச்சிக்கான ஆர்வத்தை தொழில் வழங்குனர்கள் உங்களிடம் பார்;க்க விரும்புகின்றார்கள்.  

சொல்லுங்கள்: குறுகிய காலத்தில் நான் இந்தப் பதவியில் என்னை செழிப்பாக்க விரும்புகின்றேன். நீண்ட காலத்திற்கு நான் இந்தப் பதவியில் முக்கிய இடத்திற்கு வளர விரும்புகின்றேன்.     

8. சொல்லக் கூடாதவை: எனது முந்தைய தொழில் வழங்குனர் மோசமானவர் - நான் அவரைக் கடுமையாக வெறுக்கின்றேன்.  

ஏன்: எமது முன்னால தொழில் வழங்குனரை நமது எதிர்கால தொழில் வழங்குனரிடம் தவறாகச் சித்தரிப்பது புத்திசாலித்தனமான ஒரு விடயமாகாது.   

சொல்லுங்கள்: என்னுடைய முந்தைய பதவியில் நான் இந்தக் குறிப்;பிட்ட பதவி பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் நிறையவே கற்றுக்கொண்டேன், தற்போது ஒரு புதிய வாய்ப்புக்காகவும் நான் கற்றுக்கொண்ட விடயங்களை உபயோகிப்பதற்காகவும் ஆர்வமாகக் காத்துக்கொண்டிருக்கின்றேன்.       

9. சொல்லக் கூடாதவை: இங்கே நான் எவ்வளவு சம்பாதிக்க முடியும்?   

ஏன்: சம்பளம் பற்றிக் கேட்பது நியாயமானதுதான் ஆனால் சம்பளத்தில் மட்டுமே கவனம் செலுத்துவது போல் காட்டும் வகையில் நடந்து கொள்வது தான் உங்கள் மீதான தப்பபிப்பிராயத்தைக் வெளிக்காட்டும்.    

சொல்லுங்கள்: இந்தத் தொழில் பற்றி நான் உற்சாகமாகவும் ஆர்வமாகவும் உள்ளேன், மேலும் எனது எதிர்பார்ப்புகளுக்கேற்ப சம்பளம் வழங்கப்படுவதையும் நான் உறுதி செய்ய, அதைப் பற்றி மேலும் அறிய விரும்புகின்றேன். 

10. சொல்லக் கூடாதவை: நான் இப்பதவிக்கு தகுதியற்றவான இருக்கலாம் என்று எனக்குத் தெரியும், ஆனால்...   

ஏன்: நீங்கள் உங்களுக்கு எதிராக செயல்படக்கூடாது – அதற்குப் பதிலாக உங்களிடமுள்ள பலத்தை முன்னிலைப்படுத்த முனையுங்கள்.     

சொல்லுங்கள்: எனது முந்தைய அனுபவங்களைக் கொண்டு நான் இப்பதவியில் அதனைப் பிரயோகிக்கவும் உடனடியாகப் பயிற்சி பெறுவதிலும் நான் மகிழ்ச்சியடைகின்றேன், மேலும் நான் விரைவாக புதிய விடயங்களைக் கற்றுக்கொண்டு வளருவேன் என்ற திடமான நம்பிக்கையும் எனக்கு உள்ளது என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.  

    



--------------------------------------------------------------------------------------------------

JOIN WITH US FOR CAREER GUIDANCE SERVICES AND VACANCIES UPDATES

💼 Focus Areas: Career Guidance | Career Counseling | Business Counseling | Business Motivation

📧 Email: vocatiovista@gmail.com

📞 Phone: +94 77 585 8636

🔗 Follow Us on our Social Media: 

📨 WhatsApp  🌍 Website  📘 Facebook  📸 Instagram  🎥 TikTok  ▶️ YouTube


Comments

Popular posts from this blog

Apply Now: TVEC Vacancies - 2025 | பதவி வெற்றிடங்கள் - மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு

Apply Now: Open Competitive Examination for Recruitment to Grade III of Management Service Officers (MSO) – 2024/2025

Posts of Driver and Conductor - Sri Lanka Transport Board (SLTB) | சாரதி மற்றும் நடத்துநர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பம்

FOLLOW ME ON SOCIAL MEDIA