தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பிரிவுகளின் பாடத்திட்டங்களை திருத்த நடவடிக்கை - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பிரிவுகளின் பாடத்திட்டங்களை திருத்த பல புதிய மதிப்பாய்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன – பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

2026 ஆம் ஆண்டின் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலைக் கல்வியில் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்காக பாடத்திட்டங்கள் திருத்தியமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய ஜூலை 9 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

இந்தப் புதிய சீர்திருத்தங்களின் கீழ், 10 மற்றும் 11 ஆம் ஆண்டுகளுக்கு புதிய தொழிற்கல்வி பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இந்த தொழிற்கல்வி பாடங்கள் ஒவ்வொரு பாடசாலைகளிலும் 10 மற்றும் 11 ஆம் ஆணடுகளுக்கு ஒரு குழு பாடமாக அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாணவர்கள் 10 ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் பாடசாலையில் ஒரு தொழிற்கல்வி பாடத்தைப் படித்து அதன்மூலம் NVQ 4 சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

இதற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடத்தொகுதிகளை தேசிய கல்வி நிறுவனம் தற்போது உருவாக்கி வருவதாகவும், இதன் மூலம் தற்போதைய 609 பாடசாலைகளில் இருந்து உயர்தர தொழிற்கல்வி பாடங்களை வழங்கும் பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 பாடசாலைகளாக அதிகரிக்க நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன், பாடசாலைக் கல்விக்குப் பிந்தைய தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வித் துறையின் வளர்ச்சிக்கான ஒரு மூலோபாயத் திட்டத்தை உருவாக்கி அத்துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் சந்திப்புக்களை நடாத்தி, முதற்கட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வருவதாகவும், செப்டம்பர் மாதத்திற்குள் முழு வரைவு தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்தத் திட்டங்களின் கீழ், ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்கும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வித் துறைக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் 10 மற்றும் 11 ஆம் ஆண்டுகளில் தொழிற்கல்வி பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.   

தொழிற்கல்வி பிரிவுகளில் தற்போது நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ஆசிரியர் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடராக செயல்படுத்தப்படும் என்றும், தொழில்துறையின் ஆதரவுடன், பல்வேறு தொழிற்கல்வி துறைகளில் தற்போதைய போக்குகள் மற்றும் அனுபவத்தை அவர்களுக்கு வழங்கும் என்றும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். தொழிற்கல்வி பாடப்பிரிவின் தற்போதைய போக்குகளுக்கு ஏற்ப தொழிற்கல்வி பிரிவு மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் பாடத் தொகுதிகளில் தேவையான மாற்றங்கள் 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் நிறைவடையும் என்றும் மேலும் தெரிவித்தார். 

-ஊடகப் பிரிவு-





--------------------------------------------------------------------------------------------------

JOIN WITH US FOR CAREER GUIDANCE SERVICES AND VACANCIES UPDATES

💼 Focus Areas: Career Guidance | Career Counseling | Business Counseling | Business Motivation

📧 Email: vocatiovista@gmail.com

📞 Phone: +94 77 585 8636

🔗 Follow Us on our Social Media: 

📨 WhatsApp  🌍 Website  📘 Facebook  📸 Instagram  🎥 TikTok  ▶️ YouTube

Comments

Popular posts from this blog

மாணவர்களின் கல்வித்திறன் விருத்தி: டிஜிட்டல் டிடாக்ஸ் (Digital Detox) மற்றும் நேர முகாமைத்துவம்.

The Secret to Speaking: உங்கள் பேச்சால் மற்றவர்களைக் கவர வேண்டுமா? பேசும் போது தடுமாறுகின்றீர்களா?

Grama Niladhari Exam Application 2025 (GS Exam) – Application, Eligibility & Syllabus | கிராம நிலதாரி (GS) போட்டிப் பரீட்சை 2025 – விண்ணப்பம், தகுதி, பாடத்திட்டம்

FOLLOW ME ON SOCIAL MEDIA