தொழில்முறை வாழ்க்கைத் திட்டமிடல் - உங்கள் எதிர்கால வெற்றிப் பாதையின் திறவுகோல் - Career Planning: Your Roadmap to a Successful Future
தொழில்முறை வாழ்க்கைத் ( Career) திட்டமிடல் என்பது ஒரு தனிநபர் மற்றும் அவரது தொழில்முறை வாழ்க்கை வளர்ச்சியின் முக்கியமான , ஆனால் பெரிதும் கவனிக்கப்படாத ஒரு முக்கிய பகுதியாகும். இது தொழில் இலக்குகளை அமைத்து , உங்களது திறன்கள் , விருப்பங்கள் மற்றும் உங்களது ஆளுமைகளை இணங்கண்டு அதனை மதிப்பீடு செய்து , அதனூடாக உங்களது எதிர்கால தொழில் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான திட்டங்களை உருவாக்கும் ஒரு முன்மாதிரி செயலாகும். மாணவர்கள் தங்கள் கல்வித் துறைகளைத் தேர்வு செய்யவும் , அல்லது சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட முணையும் இளம் தொழில் முயற்சியாளர்களுக்காகவும் , அல்லது தொழில் மாற்றங்களை எதிர்பார்த்து இருப்பவர்களுக்காகவும் இவ்வகை தொழில்முறை வாழ்க்கைத் திட்டமிடல் ஒரு சிறந்த பாதையினை உருவாக்குவதற்கு பெரிதும் உதவுகின்றது. நாம் இப்போது இத் தொழில்முறை வாழ்க்கைத் திட்டமிடலிலுள்ள முக்கிய படிகளை இங்கே ஆராய்ந்து அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வோம். இலக்குகளை அமைத்து , உங்களது திறன்கள் , விருப்பங்கள் மற்றும் உங்களது ஆளுமைகளை இணங்கண்டு அதனை மதிப்பீடு செய்து , அதனூடாக உங்களது எதிர்கால தொழில் இலக...